பிரான்சின் தேசிய சட்டப்பேரவை

பிரான்சின் தேசிய சட்டபேரவை (National Assembly, French: Assemblée nationale) பிரான்சின் ஐந்தாவது குடியரசு அரசியலைப்பின் கீழமைந்த ஈரவை நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். மேலவை செனட் ("Sénat") என அழைக்கப்படுகிறது.

பிரான்சின் தேசிய சட்டப்பேரவை
Assemblée Nationale
வகை
வகைமக்களவை
தலைமை
அவைத்தலைவர்பெர்னார்டு அக்கோயர், யூஎம்பி
26 சூன் 2007 முதல்
இருக்கைகள்577
கூடுமிடம்
பாலே பூர்போன், பாரிசு
இணையத்தளம்
http://www.assemblee-nationale.fr/
பாலே பூர்போன் கட்டிடம்

தேசிய சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் டெபுடிகள் ( députés) என அழைக்கப்படுகின்றனர். மொத்தம் உள்ள 577 சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து ஒரு உறுப்பினர் இருசுற்று வாக்கெடுப்பு முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பெரும்பான்மை பெற 289 உறுப்பினர்கள் தேவை. சட்டப் பேரவைக்கு தலைமை தாங்குபவர் அவைத்தலைவர் ஆவார். இவர் மக்களவையில் மிகக் கூடுதலான இடங்களைப் பெற்ற கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார். பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து துணைத்தலைவர்கள் இவருக்குத் துணையாக பணியாற்றுவர். தற்போதைய அவைத்தலைவராக பெர்னார்டு அக்கோயர் உள்ளார்.

தேசிய சட்டப்பேரவையின் ஆட்சிக்காலம் ஐந்தாண்டுகளாகும். இருப்பினும் குடியரசுத் தலைவர் சட்டப்பேரவையைக் கலைத்து புதிய தேர்தல்களுக்கு உத்தரவிடலாம்.

தேசிய சட்டப்பேரவை பாரிசு நகரில் சீன் ஆற்றங்கரையில் உள்ள பாலே பூர்போன் கட்டிடத்தில் அமைந்துள்ளது. தவிர ரூ டெ லெயூனிவெர்சிடியில் அண்மித்துள்ள கட்டிடங்களையும் பயன்படுத்துகிறது. இதனை குடியரசுக் காவலர்கள் பாதுகாக்கின்றனர்.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் அமைந்த முதல் தேசிய சட்டப்பேரவையில் பின்பற்றிய வழக்கமான இடதுசாரி கட்சியினர் அவைத்தலைவர் பார்வைக்கு இடது புறத்திலும் வலதுசாரி கட்சியினர் வலது புறத்திலும் அமரும் மரபு இ்ன்றும் பின்பற்றப்படுகிறது. பேரவையில் உள்ள கட்சி சார்பு இருக்கைகளிலிருந்தே அறிய முடிகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.