பிரான்சிசு கிரகாம் சுமித்

சர் பிரான்சிசு கிரகாம் சுமித் (Sir Francis Graham-Smith) (பிறப்பு: 25 ஏப்பிரல் 1923)ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் 1982 முதல் 1990 வரை பதிமூன்றாம் அரசு வானியலாளராக இருந்தார்.

சர் பிரான்சிசு கிரகாம் சுமித்
Francis Graham-Smith
2009 ஆம் ஆண்டில் பிரான்சிசு கிரகாம் சுமித்
பிறப்பு25 ஏப்ரல் 1923 (1923-04-25)
அறியப்படுவதுஅரசு வானியலாளர்

வாழ்க்கை

கல்வி

இவர் இங்கிலாந்தின் இலங்காசயரில் உள்ள உரோசால் பள்ளியில் படித்தார். இவர் கேம்பிரிட்ஜ் டவுனிங் கல்லூரியில் 1941 இல் சேர்ந்தார்.

வாழ்க்கைப்பணி

1940 களின் பிற்பகுதியில் இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இலாங் மைக்கல்சன் குறுக்கீட்டளவியில் பணிபுரிந்தார்.

இவர்1964 இல் மான்செசுட்டரில்கதிர்வீச்சு வானியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1981இல் அரசு வானியல் ஆய்வக இயக்குநரானார். இவர் 1975 முதல் 1981 வரை அரசு கிரீன்விச் வான்காணக இயக்குநராகப் பணிபுரிந்தார்.

தகைமைகள்

இவர் 1970 இல் அரசு கழகத்தில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[1] இவர் 1987 இல் அரசு பதக்கம் வழங்கப்பட்டார்.

இவர் 1975 முதல் 1977 வரை அரசு வானியல் கழகத் தலைவராக விளங்கினார்.

இவர் 1982 முதல் 1990 வரை அரசு வானியலாளராக இருந்தார்.

புரவலராக

இவர் பிரித்தானிய மாந்தநேயக் கழகத்தின் தகைமைசான்ற ஆதரவாளராக இருந்தார். மேன்சுபீல்டு, சுட்டன் வானியல் கழகத்தின் புரவலராக விளங்கினார்.

விரிவுரைகள்

இவர் 1965 இல் புடவித் தேட்டம் எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரையாற்ற அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. "Fellows". Royal Society. பார்த்த நாள் 30 December 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.