பிரத்தியங்கிரா தேவி

பிரத்தியங்கிரா தேவி (சமசுகிருதம்: प्रत्यङ्गिरा; Prātyangira, அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி: / 'Pratyangira/) சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். இப்பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.

பிரத்தியங்கிரா தேவி
A depiction of Prathyangira
அதிபதிவெற்றி
தமிழ் எழுத்து முறைபிரத்யங்கிரா
எழுத்து முறைप्रत्यङ्गिरा
வகைதேவி, சக்தியின் வடிவம்
ஆயுதம்திரிசூலம், சங்கு (இசைக்கருவி), சக்கரம், கதை
துணைசரபா
நூல்கள்அதர்வண வேதம்
ஒசூரில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோயில் இராச கோபுரத்தில் உள்ள பிரம்மாண்டமான பிரத்தியங்கிரா தேவி சிலை

இவர் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார்.

பெயரிலக்கணம்

காலகண்டி, பைரவ மஹிஷி என பிரத்தியங்கரா தேவி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.[1]

வடிவம்

சிம்ம முகம், 18 கரம், கரிய நிறத்துடன் சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திவாறு இருக்கிறாள்

தோற்றக் காரணம்

இந்து தொன்மவியலின் படி நரசிம்மர் பிரகலாதனுக்காக இரண்யனை (இரண்யகசிபுவை) வதைக்க சிங்க உருவமெடுத்து, அழித்தப் பிறகு அடங்காத கோபத்துடனே இருந்தார். அதனால் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துன்பப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை அடைந்து தங்களை காக்கும் படி வேண்டினர். சிவபெருமானும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, நரசிம்மரை அடக்க சரபம் என்றும் பறவை வடிவினை (பறவையும், பூதமும், மிருகமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன) எடுத்து சண்டையிட்டார். அந்த வடிவுக்கு சரபேஸ்வரர் என்று பெயர். அப்போது நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற பறவையின் சக்தியை தோற்றுவித்தார். இப்பறவையானது, சரப பறவைக்கு எதிரியாகும். எனவே சரபர் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்தியங்கிரா தேவியை தோற்றுவித்தார். [2] இத் தேவி கண்ட பேருண்டத்தினை விழுங்கினார். அதன்பின்பு சரபர், நரசிம்மரை தோற்கடித்தார். சரப வடிவத்தின் இறக்கையின் பக்கம் காணப்படுபவளே இந்த பிரத்யங்கரா தேவி.

இந்த நிகழ்வு குஞ்சிதாங்க்ரி ஸ்தவம் என்ற நூலில் உமாபதி சிவம் குறிப்பிட்டுள்ளார். [3]

பிரத்தியங்கிரா தேவி சரபரின் மனைவியருள் ஒருத்தியாவார்.

வழிபாட்டு முறை

மிளகாய் யாகம்

உளுந்தூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் ஒவ்வொரு அமாவாசையன்றும் நடத்தப்படுகிறது. [4] இந்த யாகத்தினை பிரத்தியங்கிரா யாகம் என்றும், நிகும் பலா யாகமென்றும் அழைக்கின்றார்கள். [5] அய்யாவடி, நடுக்கரை பிரத்தியங்கிரா ஆலயம் ஆகியவற்றிலும் இந்த யாகம் நடத்தப்படுகிறது சிர்காழி அடுத்த வரிசைபத்து என்ற கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்யங்கிரா ஆலயம் அமைந்துள்ளது இக்கோவில் மாதம்மூன்று நாள் அமாவாசை ,பௌர்ணமி ,தேய்பிறை அஷ்டமி யாகம் சிறப்பாக நடக்கிறது

ஆலயங்கள்

  • அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில், கும்பகோணம்.
  • பிரத்தியங்கிராதேவி கோயில் - தூத்துக்குடி - ஒரே கல்லிலான சிலை
  • ஸ்ரீ மஹா ப்ரதியங்கிர தேவி - திருவள்ளூர்(சிங்க ரதத்தில் ௯ அடி உயரத்தில் அம்பாள்)
  • சோலிங்கநல்லூர், சென்னை
  • ஸ்ரீ சுயம்பு ஆகாச ப்ரத்தியங்கரா தேவி -திருவெண்காடு (சீர்காழி வட்டம்)
  • ஸ்ரீ மகா பிரத்யங்கிரா ஆலயம் (PDD)-வரிசைபத்து ,சீர்காழி
  • ஸ்ரி மகா பிரத்தியங்கரா தேவி ஆலயம் - இரண்டாம் சிப்காட், ஒசூர்
  • ஸ்ரீ மகா பிரத்தியங்கராதேவி ஆலயம்.பள்ளூர்.வேலூர் மாவட்டம் 631051 ஸ்ரீ மஹா பிரத்யங்கரா தேவி திருக்கோவில்.. நடு நாலுமூலைக்கிணறு 628213, திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டம்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=883 பிரத்தியங்கிரா வழிபாடு தினமலர் கோயில்கள்
  2. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=883 பிரத்தியங்கிரா வழிபாடு - தினமலர் கோயில்கள்
  3. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3110&Cat=3 பகைவர் தொல்லை தீர்க்கும் பிரத்யங்கிரா தேவி
  4. http://www.dailythanthi.com/2014-03-02-ulundurpettai-agastheeswarar-in-the-temple-padhur-pirattiyankara-devi-chilli-havan உளுந்தூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் தினத்தந்தி Mar 02
  5. http://www.maalaimalar.com/2013/02/13110746/Narayani-Pratyangira-Devi-Temp.html நாராயணி பிரத்தியங்கிரா தேவி கோவில்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.