பிரதாப் பானு மேத்தா
பிரதாப் பானு மேத்தா (Pratap Bhanu Mehta, பிறப்பு: 1967) இந்தியக் கல்வியாளர், பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அறிவுப்புல வரலாறு, அரசியல் கொள்கைகள், இந்தியாவில் நிகழ்ந்த நிகழும் சமூக மாற்றங்கள், உலக நிகழ்வுகள் போன்றன பற்றிய கட்டுரைகளைச் சில செய்தி இதழ்களில் எழுதி வருகிறார்.[1]
பிரதாப் பானு மேத்தா | |
---|---|
![]() | |
பிறப்பு | 1967 |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | அரசறிவியல் |
பணியிடங்கள் | துணை வேந்தர் (அசோகா பல்கலைக்கழகம்) |
கல்வி கற்ற இடங்கள் | ஆக்சுபோர்டு செயிண்ட் ஜான் கல்லூரி (இளங்கலை), பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
கல்வித் தகுதிகள்
ஆக்சுபோர்டு செயிண்ட் ஜான் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் ஆய்வுப் பட்டமும் பெற்றார்.
பதவிகள்
புதுதில்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இந்திய நடுவணரசின் ஆளுகையில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவிலும் உறுப்பினராக உள்ளார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பதவி வகித்தார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் சமூக ஆய்வுகள் பிரிவில் இணைப் பேராசிரியராகவும் இருந்தார். ஜவகர்லால் பல்கலைக்கழகத் தத்துவம் மற்றும் சட்டத் துறையின் பேராசிரியராகவும் இருந்தார். அசோகா பல்கலைக்கழகத் துணை வேந்தராக 2017 சூலை 1 முதல் பதவியில் உள்ளார்.
பெற்ற பரிசுகள்
- இன்போசிஸ் பரிசு
- மால்கம் ஆதிசேசய்யா பரிசு
- அமர்த்தியா சென் பரிசு
பதவி விலகல்
நடுவணரசின் உயர்கல்விக் கொள்கையைக் கண்டித்து தேசிய அறிவுசார் ஆணையத்திலிருந்து பதவி விலகினார்.