பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி

பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி (Pyotr Ilyich Tchaikovsky, உருசியம்: Пётр Ильич Чайковский,[1] கேட்க ) (மே 7 [யூ.நா. ஏப்ரல் 25] 1840நவம்பர் 6 [யூ.நா. அக்டோபர் 25] 1893) புனைவியக் காலத்தைச் சேர்ந்த ஒரு ரஷ்ய இசையமைப்பாளர். இவர் ரஷ்யப் பண்பாடு சார்ந்த இசையமைப்பில் முன்னின்ற "ஐவர்" குழுவில் இவர் இல்லாவிட்டாலும் இவரது இசை ரஷ்ய இசையே என்கின்றனர். "ஐவர்" குழுவின் இசையமைப்பு முயற்சிகள் பெயர் பெற்றிருந்தாலும், 19 ஆம் நூற்றாண்டில் மிகத் திறமையான இசையமைப்பாளராக சீக்கோவ்ஸ்கி முன்னணியில் இருந்தார். இவரது பயிற்சி இவரில் மேனாட்டு இசை சார்ந்த மனப்போக்கையும், நுட்பங்களையும் உருவாக்கியிருந்தாலும் இவர் அடிப்படையில் ரஷ்யப் பண்பாடு சார்ந்தவராகவே இருந்தார். ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்களின் பயன்பாடு, ரஷ்ய வாழ்க்கை முறையில் ஆழமான ஈடுபாடு, ரஷ்யப் பண்பாடு சார்ந்த சிந்தனைப் போக்கு போன்றவற்றின் மூலம் இவர் அதனை வெளிப்படுத்தினார். இயற்கையாக இவருக்கிருந்த இசைத்திறமை இவரது ஆக்கங்களுக்கு நிரந்தரமான கவர்ச்சியை வழங்கின. எனினும் இவரது சாதனைகள் கடின உழைப்பின் மூலமும், தொழில்முறை நுட்பங்கள் மூலமும் அவ்ற்றின் மூலம் தனது உணர்வுசார்ந்த வாழ்க்கையை வெளிப்படுத்திய திறமையினாலும் நிகழ்ந்தவை.

பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி
பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி. (நிக்கோலாய் குஸ்னெட்சோவ் என்பவரால் வரையப்பட்டது. 1893)
பிறப்பு25 ஏப்ரல் 1840 (in Julian calendar)
இறப்பு6 நவம்பர் 1893 (அகவை 53)
கல்லறைTikhvin Cemetery
படிப்புDoctor of Music
படித்த இடங்கள்
  • Saint Petersburg Conservatory
பணிஇசை நடத்துநர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர்
வேலை வழங்குபவர்
  • Moscow Conservatory
கையெழுத்து

மேற்கோள்கள்

  1. உருசிய பலுக்கல்: [ˈpʲɵtr ɪlʲˈjit͡ɕ  ˌt͡ɕɪjˈkofskʲɪj]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.