பின்னவலை திறந்த விலங்குக் காட்சிச்சாலை

பின்னவலை திறந்த விலங்குக் காட்சிச்சாலை (Pinnawala Open Zoo) என்பது இலங்கை, கேகாலை மாவட்டம், பின்னவலை என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இது பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகாக அமைந்துள்ளது. இவ்விலங்குக் காட்சிச்சாலை பொதுமக்களின் பார்வைக்காக 2015 ஏப்ரல் 17 அன்று திறக்கப்பட்டது. இது இலங்கையின் முதலாவது திறந்தவெளி விலங்குக் காட்சிச்சாலையாகவும் தெகிவளை விலங்கியல் பூங்காவுக்கு அடுத்து அமையும் இரண்டாவது விலங்குக் காட்சிச்சாலையாகவும் உள்ளது.[1][2]

பின்னவலை திறந்த விலங்குக் காட்சிச்சாலை
திறக்கப்பட்ட தேதி17 ஏப்ரல் 2015
இடம்பின்னவலை, இரம்புக்கணை
பரப்பளவு44 ஏக்கர்கள்
அமைவு7°18′2″N 80°23′18″E
முக்கிய காட்சிகள்பாலூட்டிகள், பறவைகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.