பின்-உணர்வுப்பதிவியம்
பின்-உணர்வுப்பதிவியம் அல்லது பின்-உணர்வுப்பதிவுவாதம் (Post-Impressionism) என்பது, ஓவியர் எடுவார்ட் மனேயுடன் தொடங்கி பிரான்சில் உருவாகி வளர்ந்த ஓவியப் பாணியொன்றக் குறிக்கிறது. இது, முதன்மையாக ஒரு பிரெஞ்சுக் கலை இயக்கம் ஆகும். இது ஏறத்தாழ 1886 முதல் 1905 வரையான காலப் பகுதியில், அதாவது கடைசி உணர்வுப்பதிவுவாதக் கண்காட்சிக்கும், போவியத்தின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உருவானது. பின்-உணர்வுப்பதிவுவாதம், ஒளியையும், நிறத்தையும் இயற்கையில் இருப்பதுபோலக் காட்டவேண்டும் என்னும் உணர்வுப்பதிவுவாதிகளின் அக்கறைக்கு எதிரான தாக்கமாகவே உருவானது.
பிரெஞ்சு: Le centenaire de l'indépendance | |
![]() | |
ஓவியர் | என்றி ரூசோ |
---|---|
ஆண்டு | 1892 |
வகை | கன்வசில் நெய் வண்ணம் |
பரிமாணம் | 57 சமீ × 110 சமீ (22.4 அங் × 43.3 அங்) |
இடம் | லாசு அஞ்சலிசு கெட்டி அருங்காட்சியகம் |
பிரித்தானிய ஓவியரும், ஓவியத் திறனாய்வாளருமான ரோசர் ஃபிரை (Roger Fry) என்பவர் இச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை ("Post-Impressionism") பிரெஞ்சு ஓவியத்தின் வளர்ச்சியை விவரிக்கும்போது முதன்முதலில் பயன்படுத்தினார். 1910 ஆம் ஆண்டில் மனேயும் பின்-உணவுப்பதிவுவாதிகளும் என்னும் கண்காட்சியொன்றை ஒழுங்கு செய்தபோதே அவர் இப்பெயரைப் பயன்படுத்தினார். உணர்வுப்பதிவியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத அதேவேளை அதை பின்-உணர்வுப்பதிவியத்தினர் மேலும் விரிவாக்கினர். கடுமையான நிறங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்திய அவர்கள், ஓவியங்களில் தடிப்பான நிறப்பூச்சைப் பயன்படுத்தியதுடன், உலகில் காண்பவற்றையே ஓவியங்களுக்கான விடயங்களாக எடுத்துக்கொண்டனர். ஆனாலும், வெளிப்பாட்டுத் தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக வடிவங்களை திரிபுபடுத்தவும், இயற்கைக்கு மாறானதும் மேலெழுந்தவாரியானதுமான நிறங்களைப் பயன்படுத்துவதற்காகவும், வடிவவியல் வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கும் காணப்பட்டது.