பிணக்கூறு ஆய்வு

பிணக்கூறு ஆய்வு (autopsy, சவப் பரிசோதனை, பிரேதப் பரிசோதனை) —மேலும் இறப்பிற்கு பிந்தைய சோதனை (post-mortem examination), மரித்த திசு ஆய்வு (necropsy, குறிப்பாக மனிதரல்லா பிணங்களுக்கு), autopsia cadaverum, அல்லது சட்டம்சார் பிணக்கூறாய்வு (obduction) — மிகவும் தனித்தன்மையுடைய அறுவை மருத்துவமுறையாகும். பிணத்தை நன்கு ஆராய்ந்து இறப்பின் காரணத்தையும் ஏற்பட்ட விதத்தையும் அறிவதும் உடலிலிருந்த நோய் அல்லது காயத்தினை மதிப்பிடுவதும் ஆகும். இந்த மருத்துவமுறையை பொதுவாக நோயியலில் சிறப்பான பயிற்சி பெற்ற மருத்துவர் மேற்கொள்வார். இது உயிர்த்திசு சோதனைக்கு எதிரானது.

பிணக்கூறு ஆய்வு
இடையீடு
ரெம்பிரான்ட்டின் மரு.நிகோலெசு துலிப்பின் உடற்கூற்றியல் பாடங்கள் ஓவியம் பிணக்கூறு ஆய்வை சித்தரிக்கிறது.
ICD-9-CM89.8
MeSHD001344

பிணக்கூறு ஆய்வுகள் சட்ட அல்லது மருத்துவக் காரணங்களுக்காக நடத்தப்படுகின்றன. ஓர் குற்றம் நிகழ்ந்தநிலையில் தடவவியல் பிண ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காரணமறியா இறப்புக்களின்போது மருத்துவ அறிவிற்காக ஏன்,எப்படி என அறிய மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கல்விக்காகவும் சில பிண ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிண ஆய்வை மேற்புற ஆய்வு மட்டுமே போதுமானவை என்றும் முறையாக உடலை அறுத்து உட்புறச் சோதனைகள் நடத்தப்பட வேண்டியவை இருவகையாகப் பிரிக்கலாம். உட்புறச் சோதனைகளை நடத்த அண்மித்த உறவினரின் அனுமதி தேவையாக இருக்கும். உட்புறச் சோதனைகள் முடிவுற்ற பின்னர் உடல் மீண்டும் திறந்த காயங்கள் மூடப்பட்டு பழையநிலைக்கு வருமாறு தைக்கப்படும்.

வெளி இணைப்புகள்

  • Autopsy - a detailed description by a pathologist complete with cartoon figures.
  • The Virtual Autopsy - a site from the University of Leicester where one examines the patient, looks at the (medical) history and gets a try at the diagnosis.
  • How Stuff Works - Autopsies
  • Autopsy of a Murder - An interactive exploration of a murder scene and the science involved in a criminalistic investigation: autopsy and laboratory expertise. Produced by the Montreal Science Centre for its namesake exhibition.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.