பிங்கலி வெங்கையா
பிங்கலி வெங்கைய்யா, (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆவார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார்.
பிங்கலி வெங்கைய்யா | |
---|---|
பிறப்பு | ஆகத்து 2, 1876 மச்சிலிப்பட்டணம், கிருஷ்ணா மாவட்டம் |
இறப்பு | 4 சூலை 1963 86) விஜயவாடா | (அகவை
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் |
மசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார். பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், இலாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் சப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.
நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.
தென்-ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

காக்கினாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார். மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அடவை உருவாக்க வேண்டினார். விசயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசிய கொடியை அறிமுகப் படுத்தினார்.[2]
முதலில் கொடியின் நடுவில் ஓர் இராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியைப் பருத்தித் துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். [3]
தேசிய கொடியை உருவாக்கிய பிங்கலி வெங்கய்யா, அந்த அளவு பிரபலமாகவில்லை. இவர் தன் 86 வயதில் 1963 ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு, 2009இல் இவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.[4]
சான்று
- "History of Indian Tricolor". Government of India. மூல முகவரியிலிருந்து 20110522 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 15, 2012.
- பிங்கலி வெங்கய்யா: தேசியக் கொடியை வடிவமைத்தவர்
- பருத்திச் செடியும் பாரதக் கொடியும்தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016
- - ராஜலட்சுமி சிவலிங்கம் (2015 ஆகத்து 2). "பிங்கலி வெங்கய்யா 10". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 31 சனவரி 2019.