பல்கு

பல்கு (/bɑːlx/; பஷ்டோ, பாரசீகம்: بلخ, பல்கு; பண்டைக் கிரேக்கம்: Βάκτρα, பக்ட்ரா; பாக்திரியம்: Βάχλο, பாக்லோ) என்பது ஆப்கானித்தானின் பல்கு மாகாணத்தில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். மாகாணத் தலைநகரான மசார்-இ ஷரிப்புக்கு சுமார் 20 km (12 mi) வடமேற்கிலும் மற்றும், உஸ்பெகிஸ்தான் எல்லை மற்றும் அமு தர்யா ஆற்றுக்குத் தெற்கில் சுமார் 74 km (46 mi) தொலைவிலும் இது அமைந்துள்ளது. இது வரலாற்றில் பௌத்தம், இசுலாம் மற்றும் சொராட்டிரிய நெறி ஆகியவற்றின் பண்டைய மையமாக இருந்துள்ளது. குராசான் பகுதியின் ஒரு முக்கியமான நகரமாக ஆரம்ப காலத்தில் இருந்தே இது இருந்திருக்கிறது.

பல்கு
بلخ Βάχλο
2001 சூலையில் பச்சைப் பள்ளிவாசலின் (பாரசீகம்: مَسجد سَبز)[1] இடிபாடுகள். இதன் பச்சை ஓடு குப்பா (அரபு மொழி: قٌـبَّـة, குவிமாடம்),[2] காரணமாக இது இப்பெயர் பெற்றது.
பல்கு
ஆப்கானித்தானில் பல்கின் அமைவிடம்
ஆள்கூறுகள்:
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்பல்கு மாகாணம்
மாவட்டம்பல்கு மாவட்டம்
ஏற்றம்1
மக்கள்தொகை (2006)
  நகரம்77
நேர வலயம்+ 4.30
வெப்பநிலைகுளிர்ந்த பகுதியளவு வறண்ட வெப்பநிலை

முதன்முதலில் இது இந்து சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக மகாபாரதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. பஹ்லிகா அல்லது வஹ்லிகா என்று இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆட்சியாளர் குருச்சேத்திரப் போரில் பங்கு பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.