பாலுணர்வுள முன்னேற்றம்

பிராய்ட் உளவியலில், பாலுணர்வுள முன்னேற்றம் அல்லது பாலுணர்வுள வளர்ச்சி அல்லது பாலுணர்வுள அபிவிருத்தி (psychosexual development) என்பது உளநிலைப் பகுப்பாய்வு பாலியல் தூண்டலின் மைய அடிப்படைக்கூறு ஆகும். இது மனித இருத்தலில், பிறப்பு முதல் ஐந்து படிநிலைகளில் வளர்ந்த, ஓர் உள்ளுணர்வு சிற்றின்ப உணர்ச்சி உடமையைத் தூண்டும் விடயமாகும். ஒவ்வொரு படிநிலையாகிய வாய்வழிப் படிநிலை, குதவழிப் படிநிலை, பாலுணர்வுப் படிநிலை, மறைவான படிநிலை, பாலுறுப்புப் படிநிலை என்பன பாலுணர்வைத் தூண்டும் பகுதிகளினால் தனிச்சிறப்பாய் அமைந்துள்ளதோடு, அவை சிற்றின்ப உணர்ச்சித் தூண்டலின் மூலமாகவும் உள்ளன. ஒரு பிள்ளை ஏதாவது பாலுணர்வுள முன்னேற்றப் படிநிலைக்கான பாலியல் விரக்தி தொடர்புபட்ட அனுபவத்தைப் பெறுமாயின், அப்பிள்ளை பதகளிப்பு அனுபவத்தைப் பெறக்கூடும். இது முதிர்பருவத்தில் மன பிறழ்வு செயற்பாடான உளவழி நரம்பு நோயாக தொடரக்கூடும் என சிக்மண்ட் பிராய்ட் முன்மொழிந்தார்.[1][2]

உசாத்துணை

  1. "Introduction to Sigmund Freud, Module on Psychosexual Development". Cla.purdue.edu. பார்த்த நாள் 2013-08-01.
  2. Bullock, A., Trombley, S. (1999) The New Fontana Dictionary of Modern Thought Harper Collins:London pp. 643, 705
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.