பாலியெசுட்டர் பிசின்

பாலியெசுட்டர் பிசின் (Polyester Resin) அல்லது பாலி பிசின் (Polyresin) என்பது ஈருப்பு மூல கரிம அமிலத்தினாலும் பாலி-கைட்ரிக் மதுதிரவத்தினாலும் (alcohol) ஏற்படக்கூடிய வேதியியல் வினையினால் அமையும் நனைவற்ற (unsaturated) பிசின் ஆகும் . தகடு வார்ப்பு கூட்டு (sheet molding compound) , பொதி வார்ப்பு கூட்டு( bulk molding compound) மற்றும் ஒளியச்சின் மைக்கூட்டு போன்றவைகளுக்கு இதுவே மூலப்பொருளாகும் . இது வெப்பமிறுக்குப் (thermo-set) பல்பகுதியங்களால் ஆன பிசுப்பிசுப்பான மரப்பசை போன்ற ஒருவகை செயற்கை திரவம் ஆகும் . இவை வைனலிசுட்டர் பிசின்களை விட 25% மும் , இப்பாக்சி பிசின்களை விட 30-35% மும் விலை குறைவானதாகும் .

இரு பிணைப்புகள் கொண்ட பாலிகார்பாக்ச்சிலிக்கினாலும் (polycarboxylic) , பாலியால்ச்சு (Polyols) என்பதினாலும் ஏற்படக்கூடிய வேதியியல் வினையினால் அமையும் ஒடுக்கல் பல்பகுதியங்களான (condensation polymer) நனைவற்ற (unsaturated) பிசின் ஆகும் . பாலியால்ச்சு என்பதை பல கரிம மது திரவம் , கைத்ராக்சயில் வினைக்கூட்டு , பாலிகைட்ரிக் மதுதிரவம் போன்றவையாகவும் அறியப்படும் . பயன்படுத்தும் மாதிரி பாலிகார்பாக்சிலிக் அமிலங்கள் பித்திலிக் மற்றும் மேலிக் அமிலங்கள் ஆகும் . வினையானது முடிவுபெற வழிசெய்ததும் எசுட்டராக்கம் வினையின் துணைப் பொருளான நீரினை வினைப்பெருக்கில் இருந்து நீக்கப்படும் .

நனைவற்ற ஆலிபின் போன்றவற்றோடு வினைபுரிவதற்காக இருபிணைப்புகளை உள்ளடக்கி கொள்ளும் பாலியெத்திலீன் டெரிபித்தலேட் என்ற அமிலம் உள்ளதை போன்ற வேறுபாடுகள் நனைவு பிசின்களில் இருந்து நனைவற்ற பிசின்களுக்கு உண்டு . இதனால் பிசின்களில் பிறவற்றை சேர்ப்பதற்கும் , அதனை வலுவூட்டுவதற்கும் , அதன் பாகுமையை குறைப்பதற்கும் , வினையூக்கி யாக செயல்படுத்துவதற்கும் பயன் படுகிறது .

பாலியெசுட்டர் பிசின்கள் என்பவை வெப்பமிறுக்கு பல்பகுதியங்கள் . வெப்பமிறுக்கு என்றால் நெகிழிகளை முதலில் காய்ச்சுகையில் மெலிதாகி பின் அதை குளிரச்செய்யும் பொழுது நெகிழும் தன்மையை முற்றிலும் இழக்கும் என்ற வேதியியல் பண்பு ஆகும் . வெப்பமிறுக்கு பொருட்களின் முரணான பொருள் வெந்நிறுத்து நெகிழிகள் ஆகும் . இவை மறுபடியும் காய்ச்சினால் கூட மறுபடியும் மெலிதாகக்கூடும் . பாலியெசுட்டர் பிசின்கள் பெரும்பாலும் திரவமாகவே விலைபோகும் . இவைகளை இழைவலுவூட்டு நெகிழிகளை தயாரிக்க பயன்படுத்துவார்கள் . அப்பொழுது மெத்தில் எத்தில் கீட்டோன் அல்லது பென்சாயில் பெராக்சைடு போன்ற வினையூக்கிகளை பல்பகுதிய உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக பயபடுத்துவார்கள் . பாலியெசுட்டர் பிசின்களை வினையூக்கிகளின் உதவியுடன் வெப்பத்தினால் ஆற்றும் முறைக்கு வெப்பம் ஆற்றுதல் என்று கூறலாம் . பயன் படுத்தக்கூடிய வினையூக்கியின் அளவு அதிகமானால் வெப்பம் அதிகரிப்பதனுடன் தீப்பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது .

பாலியெசுட்டர் பிசின்களின் பயன்கள்

பாலியெசுட்டர் பிசின்களை படகு , விமானம் , உந்து வண்டிகள் போன்றவற்றுக்கு வடிவப் பொருட்களை ( கண்ணாடியிழை அல்லது கரிமயிழை ) தயாரிக்கவும் , வடிவப்பொருட்களை பழுதுபார்க்கவும் , மரம் நிரப்பவும் , உருவார்ப்புகளுக்கும் , ஒட்டீரம் ஆகவும் பயன்படுத்துவார்கள் . இதற்கு நன்கு அணிவு மற்றும் ஒட்டும் தன்மையும் உள்ளது . இவை பழுது பார்க்கவும் , பிணைப்புகளுக்கும் பயன்படுத்தலாம் . பாலியெசுட்டர் பிசின்கள் நீடித்து இருக்கும் ; புற ஊதாக் கதிர்கள் தடுப்புத்த் திறன் குறைவானதாக இருக்கும் ; நீரில் சேராது. இவை வலுவூட்டவும் , பிற பொருட்களுடன் சேர்க்கவும் , நிரப்பவும் பயன்படுத்துவதால் அனைத்து பாலியெசுட்டர் பிசின் பொருட்களும் ஒருவாராக அமைப்பது கடினம் ஏனென்றால் அதன் ரசாயன கலவை சிக்கல் மிகுந்தது என்பதை அறிவது நன்று.

உடல் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள்

ச்சுடைரின் வாயு வெளிப்பாடுகள் உழைப்பாளர்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது என்பதனால் நீர்ம பாலியெசுட்டர் பிசின்களை பயன்படுத்த முன்வந்தனர் . எனினும் ச்சுடைரின் பயன்பாட்டை முற்றிலும் நீக்க முடியவில்லை . இதனால் குறைந்த ச்சுடைரின் வாயு வெளிப்படுகின்றது . இவ்வாறு இருந்த போதிலும் உழைப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதனால் , அனைவரும் தற்போது நீர்ம பாலியெசுட்டர் பிசின்களையே பயன்படுத்துகின்றனர் .

நனைவற்ற பாலியெசுட்டர் பிசின்களின் வகைகள்

  • பொதுப்பயன் பிசின்கள்
  • இழைப்பூச்சு பிசின்கள்
  • இரசாயன காப்பு பிசின்கள்
  • வெப்பந்தாங்கு பிசின்கள்
  • மின்சார இயக்கிகளின் பிசின்கள்
  • தொடர் அடுக்கு பிசின்கள்
  • வெற்றிட பையமைப்பு பிசின்கள்
  • வெற்றிட உறுஞ்சு பிசின்கள்
  • ஒளிக்கசிவு பிசின்கள்
  • திண்ம பரப்பு பிசின்கள்

இதனையும் பாருங்கள்

பிசின்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.