பாலின வாதம்

பாலின வாதம் , (Sexism) என்ற சொல் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் [1] ஒரு பால் மற்றதை விட உயர்ந்தது, சிறப்பான திறன் கொண்டது, மதிக்கப்பட வேண்டியது என்ற எண்ணம் அல்லது நம்பிக்கையைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. இது பிறபாலரிடையே பாகுபாடு காண்பதையும் உள்ளடக்கியது. மற்ற பாலரிடம் வெறுப்பு காட்டுவது, முன்தீர்வு கொள்வது என்பனவும் ஆண்களுக்கான பண்புகள் இவையெனவும் மகளிருக்கான பண்புகள் இவையெனவும் முன்மொழிதலும் பாலின வாதம் ஆகும்.[2] இது ஆணாதிக்கம் மற்றும் பெண்ணாதிக்கம் எனவும் வழங்கப்படுகிறது.

The sign of the headquarters of the National Association Opposed To Woman Suffrage.

பாலினப் பாகுபாடு என்பது பால் அல்லது பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகும். சில நாடுகளில் சிலவகை பாலினப் பாகுபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.வேறுபல நாடுகளில் வெவ்வேறு சூழல்களில் தடை செய்யப்பட்டுள்ளன.[3]இந்தியா போன்ற நாடுகளில் பாலினப் பாகுபாட்டால் சிசுக்கொலைகளைத் தவிர்க்க கருவின் பாலை முன்னரே பெற்றோருக்கு அறிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Shorter Oxford English Dictionary, 6th edition
  2. Brittan, Arthur (1984). Sexism, racism and oppression. Blackwell. பக். 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780855206748.
  3. Neuwirth, Jessica (2004). "Unequal: A Global Perspective on Women Under the Law". Ms. Magazine.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.