பார்முலா பந்தயங்கள்

பார்முலாப் பந்தயங்கள் என்று பலவித திறந்த சக்கர ஓரிருக்கை தானுந்து விளையாட்டுக்களைக் குறிக்கிறோம். இதனை நடத்துகின்ற பன்னாட்டு தானுந்து கூட்டமைப்பு (FIA) இரண்டாம் உலகப் போர் பிந்தைய ஓரிருக்கை வண்டி நெறிமுறைகளை பார்முலா என்று குறிப்பிட்டதை ஒட்டி இப்பந்தயங்கள் பார்முலாப் பந்தயங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் பார்முலா ஒன்று,பார்முலா இரண்டு மற்றும் பார்முலா 3 புகழ்பெற்றவை. மேலும் இவை பிற ஓரிருக்கை தானுந்துப் போட்டிகளான GP2 வகைப் பந்தயங்களையும் பரவலாக குறிக்கின்றன.

ஓர் பார்முலா நிப்பன் லோலா தானுந்து

பார்முலா ஒன்று மற்றும் பார்முலா இரண்டு (தற்போது இதனிடத்தைப் பிடித்துள்ள GP2) ஆகியன ஓர் பந்தய விளையாட்டு வீரரின் வாழ்வில் பார்முலா ஒன்று செல்ல வழிநடத்துவதால் இவற்றை வழிநடத்து பார்முலா (feeder formulae) என அழைக்கின்றனர். இத்தகைய பந்தயங்களில் இரு முதன்மையான பிரிவுகள் உள்ளன: திறந்த நெறிமுறையில் வண்டியின் உடற்பாகமும் (chassis) விசை இயந்திரமும் (engine) போட்டியாளரே முடிவு செய்யலாம். மற்ற குறிப்பீடு நெறிமுறையில் இரண்டையும் ஒரே தயாரிப்பாளர் வழங்குவார். பார்முலா 3 திறந்த நெறிமுறைப் பந்தயத்திற்கான எடுத்துக்காட்டு. குறிப்பீடு நெறிமுறைப் பந்தயத்திற்கு பார்முலா பிஎம்டபுள்யுவை காட்டாகக் கொள்ளலாம். சில நேரங்களில் இந்த இரண்டு வகைகளில் அடங்காத பந்தயங்களும் நடக்கின்றன: பார்முலா ஃபோர்ட் பந்தயத்தில் உடற்பாகம் ஏதேனும் இருக்கலாம் ஆனால் விசை இயந்திரம் ஒரே தயாரிப்பாளராக இருப்பார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.