பார்த்திபன் (நடிகர்)

பார்த்திபன் ஒரு பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் தமிழகத்தின் ஆறு முதல்வர்களோடு திரைப்படத்துறையில் பணியாற்றிய பெருமை பெற்றவர். இவர் 1958இல் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்து புகழ்பெற்றார். [1]

பிறப்பும் கல்வியும்

வேலூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி எனும் ஊரில் சக்கரவரத்தி ராமசாமி-ராஜலட்சுமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் கல்வியை கற்றார். அப்போது கல்லூரி நாடகங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறை

1953இல் தலைமைச் செயலகத்தில் வேலை செய்தார். எஸ்.ஜே. ஆச்சாரியாவின் கோடையிடி நாடகத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். திரைப்பட ஆசையால் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார்.

1955இல் இந்தித் திரைப்படமான இன்சானியத் என்பதில் வில்லர்கள் குழுவில் ஒரு ஆளாக நடித்தார். எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட தொடர்பால், அவருடைய படங்களில் ஐ.ஜி வேடம் கிடைத்தது. நிறைய எம்.ஜி.ஆர் படங்களில் ஐ.ஜி வேடத்திற்கு பார்த்திபனே நியமிக்கப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக சிவாஜி கணேசனை எதிர்த்து பேசும் வசனங்கள், திரைத்துறையில் நீங்கா புகழைத் தந்தது.

திரைப்படங்கள்

ஆதாரங்கள்

  1. நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ - குங்குமம் கட்டுரை - 3-11-2014
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.