பார்ண் படி

பார்ண் படி (Barn Buddy) என்பது தெப்ரோத்தின் சமூக வலையமைப்பு ஆட்டமாகும்.[1] இவ்வாட்டத்தை முகநூல், ஹாய்5 ஆகிய சமூக வலையமைப்புத் தளங்களில் விளையாட முடியும். இது ஒரு தோட்ட ஒப்புச்செயலாக்கச் சமூக வலையமைப்பு ஆட்டமாகும்.[2] இவ்வாட்டத்திற்குப் போட்டியாக உள்ள ஆட்டங்களாக ஃபார்ம்வில், ஹேப்பி ஃபார்ம், ஃபார்ம் டவுன், ஹார்வெஸ்ட் மூன் போன்ற ஆட்டங்களைக் குறிப்பிட முடியும்.

பார்ண் படி

ஆக்குனர்தெப்ரோத்
கணிமை தளங்கள்அடோப் ஃப்ளாஷ்
பாணிஒப்புச்செயலாக்கம்
வகைபல விளையாட்டு வீரர்களின் தலையீட்டுடன் தனி விளையாட்டு வீரர்
ஊடகம்வலை மேலோடி
கணினி தேவைகள்

வலை மேலோடி, ஃப்ளாஷ்

உள்ளீட்டு முறைகள்விசைப்பலகை, சுட்டி

இவ்வாட்டத்தைத் தமிழிலும் பெற்றுக் கொள்ள முடியும்.[3]

விளையாடுதல்

ஒருவர் பார்ண் படியை விளையாடத் தொடங்கும்போது அவருக்கு ஆறு நிலத் துண்டுகளும் சில பயிர்களும் வழங்கப்பட்டிருக்கும். அப்போது அவர் சுழியாவது தரத்தில் இருப்பார். பின்னர், பயிர்களை நட்டு அறுவடை செய்வதன் மூலமும் விலங்குகளைத் துடைப்பதன் மூலமும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.[4]

கடை

பார்ண் படியில் கடை என்பது பார்ண் படி விளையாடுவதற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு உதவுகின்றது. இதற்காக நாணயங்களையும் கடன்களையும் பயன்படுத்த முடியும்.

பயிர்கள்

பார்ண் படியில் பயிர்களை நட்டு அறுவடை செய்ய முடியும்.

இப்பயிர்களைக் குறிப்பிட்ட காலத்தினுள் அறுவடை செய்யாவிடின் அவை வாடிப் போய் விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூக்கள்

பார்ண் படியில் பூக்களை நாணயங்களுக்கும் விசேட பூக்களைக் கடன்களுக்கும் வாங்க முடியும்.

மிருகங்கள்

பார்ண் படியில் நாணயங்கள் மூலமும் கடன்கள் மூலமும் மிருகங்களை வாங்க முடியும்.

பார்ண் படியில் சில உயிரினங்களைத் துடைப்பதன் மூலம் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அலங்காரங்கள்

கடை மூலம் தானியக் களஞ்சியங்கள், பெயர் அடையாளங்கள், வைக்கோற்கேடு போன்றவற்றை வாங்கிப் பண்ணையை அலங்கரிக்க முடியும். மேலும் பின்னணிகளையும் மாற்றி அமைக்க முடியும்.

டோமோ

கடையில் டோமோ என்னும் கேலிச்சித்திரக் கதாபாத்திரத்தையும் வாங்க முடியும்.

ஏனையவை

ஏனையவை என்னும் தத்தலில் வலிமையான உரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இது பயிர்களின் வளரும் நிலையை 50 சதவீதத்தால் குறைக்கக்கூடியது.

வரையறையுள்ள பதிப்புகள்

பார்ண் படியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பெறக்கூடியதாக வரையறையுள்ள பதிப்புகளும் வழங்கப்படுவதுண்டு.

சேமிப்புவீடு

விளையாடுபவர் அறுவடை செய்த பொருள்களை விற்பதற்குச் சேமிப்புவீடு பயன்படுத்தப்படுகின்றது.

அடைவுகள்

பார்ண் படியில் அடைவுகளைப் பெறுவதன் மூலம் அனுபவத்தையும் கடன்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கென பார்ண் படி ஆட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பணிகளை முடிக்க வேண்டும்.

தலைவர்பலகை

பயனரின் நண்பர்களிடையேயும் பயனரின் நாட்டிலுள்ளவர்கிடையேயும் உலகிலேயும் முன்னணியில் உள்ளவர்களைப் பற்றிய தகவல்களைப் பார்ண் படியின் தலைவர்பலகை தருகின்றது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.