பார்சிலோனா பெருங்கோவில்

பார்சிலோனா பெருங்கோயில் அல்லது புனித எலுலேலியா பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de la Santa Cruz y Santa Eulalia) என்பது எசுப்பானியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] புனித எலுலேலியா உரோமானியக் காலத்திலே இரத்த சாட்சியாக மறித்தவர் என நம்பப்படுகின்றது. இவரது உடல் இப்பெருங்கோவிலின் நிலவறையிலே உள்ளதாக கூறப்படுகின்றது. இது கோதிக் கட்டிடக்கலைக்குப் புகழ் பெற்றது. இவ்வாலயம் பார்சிலோனியா கத்தோலிக்க உயர்-மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். 13 ஆம் 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இவ்வாலயம் கட்டப்பட்டது.

பார்சிலோனா பெருங்கோவில்
Cathedral of the Holy Cross and Saint Eulalia
Catedral de la Santa Creu i Santa Eulàlia
Catedral de la Santa Cruz y Santa Eulalia
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பார்சிலோனா, காத்தலோனியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்41°23′02″N 2°10′35″E
சமயம்Roman Catholic
மாகாணம்பார்சிலோனியத் திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1867
நிலைதேவாலயம்
செயற்பாட்டு நிலைActive
தலைமைலூயிஸ் மார்டினெஸ் சிஸ்டாக்
இணையத்
தளம்
www.catedralbcn.org
கட்டிடக்கலை வகைதேவாலயம்
கட்டிடக்கலைப் பாணிகோதிக் கட்டிடக்கலை
அடித்தளமிட்டது1298
நிறைவுற்ற ஆண்டு1420
நீளம்90 மீட்டர்கள் (300 ft)
அகலம்40 மீட்டர்கள் (130 ft)
உயரம் (கூடிய)53 மீட்டர்கள் (174 ft) (2 towers)

இவாலயத்தினுள் உள்ள தோட்டத்தில் குளம் 1448 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதில் தற்போது பதின்மூன்று வெள்ளை நிற வாத்துக்கள் விடப்பட்டுள்ளன (எலுலேலியா கொலை செய்யப்படும் போது அவருக்கு வயது பதின்மூன்று).[2]

இவ்வாலய கூரையில் மிருகங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை வீட்டு மற்று புராண ரீதியான மிருகங்களின் சிற்பங்கள் ஆகும்.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. Though sometimes inaccurately so called, the famous Sagrada Família is not a cathedral
  2. http://www.catedralbcn.org/

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.