பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர் அல்லர். சங்கநூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தவர். எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர். இவரது கடவுள் வாழ்த்துப் பாடல்களை நூலுக்குத் தொடக்கப் பாடலாக இணைத்துள்ளார்.[1]
இவரது பாடல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு[2] ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக அமைந்துள்ளன.
- காலம்
நூல் | கடவுள் | நூலின் எண்ணிக்கைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதா? |
---|---|---|
அகநானூறு | சிவன் | இல்லை |
ஐங்குறுநூறு | சிவன் | இல்லை |
குறுந்தொகை | முருகன் | இல்லை |
நற்றிணை | திருமால் | இல்லை |
புறநானூறு | சிவன் | ஆம் |
இவரால் பாடப்பட்ட பாரத வெண்பாக்கள் 818 தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.
அடிக்குறிப்பு
- பாரதம் பாடிய பெருந்தேவனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- புறநானூறு 1 கடவுள் வாழ்த்துப் பாடல்
- மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, பக்கம் 3
- மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பக்கம் 19
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.