பாரதம் (நூல்)
தமிழில் பாரதக் கதையை செய்யுள் வடிவில் கூறும் பண்டைய நூல்கள் எட்டு. அவை வடமொழியிலுள்ள வியாச பாரதத்தைத் தழுவி உருவாக்கப்பட்டவை. அவற்றைத் தொகுத்துக் காண்பது நன்று.
நிரலடைவு
நூல் | ஆசிரியர் | நூற்றாண்டு | குறிப்பு |
---|---|---|---|
பாரதம் | - | - | "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" [1][2] |
பாரதம் | பாரதம் பாடிய பெருந்தேவனார் | - | எட்டுத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடிய புலவர் |
பாரத வெண்பா | பெருந்தேவனார் | 825-885 [3] | பாட்டும் உரையும் கலந்த நூல் [4] |
பாரதம் | கருணிலை விசாகன் | 13 [5] | திருவாலங்காடு கல்வெட்டுக் குறிப்பு |
வில்லிபாரதம் | வில்லிபுத்தூர் ஆழ்வார் | 14 [6] | 4351 பாடல் [7][8] |
ஆதிபருவத்து ஆதிபருவம் | அம்பலத்தாடுமையன் | 17 | சந்தனு வரலாறு மட்டும் |
பாரதப் பிற்பகுதி | அட்டாவதானம் அரங்கநாதக் கவிராயர் | 18 | 11-18 ஆம் நாள் போர் மட்டும். 2477 பாடல் [9] |
நல்லாப்பிள்ளை பாரதம் | நல்லாப்பிள்ளை முருகேச முதலியார் | 19 | புதிதாக 11,000 பாடல்கள் பாடி வில்லிபாரதத்தை விரிவாக்கினார்.[10] |
அடிக்குறிப்பு
- சின்னமனூர்ச் செப்பேடு நூல்
- இன்று இல்லை
- மூன்றாம் நந்திவர்மன் காலம்
- ஒருபாடலில் நந்திவர்மனைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
- மூன்றாம் குலோத்துங்கன் காலம்
- வக்கபாகை வரபதி ஆட்கொண்டான் இப்புலவரைப் பேணினான்
- பாரதப் போரில் 10 நாள் போர் வரையில் உள்ளது.
- இந்நூலின் பாயிரப் பகுதியை ஆசிரியரின் மகன் 'வரந்தருவார்' பாடியுள்ளார்.
- பதிப்பு 1922
- நாட்டுப்படலம் நகரப்படலம் சேர்க்கப்பட்டுள்ளன
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.