பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு


இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் ஹஸ்ரத் உஸமான் (றழி) அவர்களின் இருதிக் காலப்பகுதியைத் தொடர்ந்து குழப்ப நிலைகள் அதிகரித்துச் சென்றன. அப்துல்லாஹ் பின் ஸபா போன்ற தீய சக்திகளது நடவடிக்கைகள் காரணமாக 'ஜமல்' 'ஸிப்பீன்' போன்ற குழப்பங்களும் ஏற்பட்டன. அலி (றழி) அவர்களுக்கும் முஆவியா (றழி) அவர்களுக்குமிடையில் வளர்ச்சியடைந்த சென்ற முறன்பாடுகளும் முஸ்லிம்கள் மத்தியில் பல பிரிவுகள் ஏற்படுவத்றகு காரணங்களாக அமைந்தன. தங்களை ஒரு தனித்துவமான பிரிவாக அடயாளங் காட்டிக் கொண்டு காரிஜீக்கள் பிரிந்து சென்றனர். அலி (றழி) முஆவியா (றழி) அம்ருப்னில் ஆஸ் (றழி) போன்றவர்கள் பெரும்பாவங்களைப் புரிந்துள்ளனர் என்றும் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்றும், பெரும்பாவங்களை செய்தவர்கள் காபிர்கள் என்றும் தாம் அல்லாத அனைவருமே காபிர்கள் என்றும் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்றும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டு ஓர் அரசியல் சக்தியாக இவர்கள் தொழிட்பட்டனர். மறுபுறத்தில் இன்னொரு பிரிவினர்; அலி (றழி) அவர்களின் குடும்பத்திற்கு கூடுதலான மதிப்பளித்து அலியை தெய்வப்பிறவி என்று புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கினர். இவ்விரு பிரிவுகளையும் சாராது இன்னொரு பிரிவினர் அல்குர்ஆன், சுன்னாவின் முடிவுகளில் தங்கி நின்றனர். இவர்களையே சுன்னிக்கள் அல்லது அஹ்லுஸ்ஸுன்னா வல்;ஜமாஅத் என்று அழைக்கின்றோம். இவர்களில் எமது தலைப்புடன் தொடர்புடையவர்கள் ஷPஆக்கள் எனும் அலியை ஆதரித்தவர்கள். எமது தலைப்பின் படி ஷPஆக்கள் பாரசீகத்தில் வளர்ச்சியடைந்தமைக்கான காரணிகளை இணங்கான்பதுடன் ஷPஆ சுன்னா வின் பிரதான கொள்கைகளையும் அவற்றிட்கிடையிலான வேறுபாட்டை விளக்குவதாயும் உள்ளது. இதனடிப்படையில் பாரசீகத்தில் ஷPயா தோற்றம் பெற்று வளர்ச்சியடைவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகளையும், ஷஆ, சுன்னிக்களின் கொள்கைகள், அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் என்பவற்வை சற்று விரிவாக நேகாக்குவோம்.

1. முன்னுரை

2. பாரசீகம்

பாரசீகம் பல்லாயிரம் ஆண்டுகளின் சரித்திரத்தையுடைய வரலாற்றுப் பெருமையும் தொன்மையும் மிக்க ஒரு நாடாகும். இதன் நாகரீகம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். கி.மு 4000 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள. பாரசீக நாகரீகத்தின் எழுச்சிக் காலமாக மகாரைஸ் (கி.மு 551-534) அரசின் காலம் கருதப்படுகின்றது. இவ்வரச பரம்பரையினரை மகா அலெக்ஸான்டர் தோற்கடித்து தனது அரசை நிறுவினார். கி.பி 2ம் நூற்றாண்டளவில் பாரசீகத்தை சாசானிய அரசபரம்பரையினர் ஆழத்தொடங்கினர். அவர்கள் சுமார் 400 வருடங்கள் ஆட்சி செய்தனர். கி.பி 637 ல் காதிஸிய்யாவில் நடந்த போரிலும் கி.பி 641 ல் நகாவந்தில் இடம்பெற்ற போரிலும் முஸ்லிம்கள் சாசனியர்களை தோற்கடித்து அங்கு இஸ்லாமிய அரசை நிறுவினாகள். அன்று பாரசீகம் என்று அழைக்கப்பட்டது இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளையாகும். இன்று ஈரானை குறிப்பதற்காக பாரசீகம் என்ற சொல்லை சிலர் பயன்படுத்துகின்றனர். எமது தலைப்புக்கு உட்படுவது பண்டைய பாரசீக பிதேசங்களாகும். அவற்றில் குறிப்பாக இன்றைய ஈரானாகும். முஸ்லிம்கள் பாரசீகத்i கைப்பற்றியதைத் தொடர்ந்து பாரசீகர்கள் படிப்படியாக இஸ்லாத்தை ஏற்கலானார்கள். அர்கள் இஸ்லாத்துக்கு முன்னர் ஸெராஸ்ரிய மதத்தினை பின்பற்றுபவர்களாகவும் நெருப்பு வணங்கிகளாகவும் இருந்தார்கள்.

2.1 இஸ்லாத்துக்கு முன்னர் பாரசீகம்


மாபெரும் நாகரீகத்தின் சொந்தக்காரர்கள் பாரசீகர்கள் அவர்கள் இஸ்லாத்தை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் அக்காலத்தில் கானப்பட்ட பல்வேறு வல்லரசுகளின் ஆதிக்கத்துதுக்கு உட்பட்பவர்களாக இருந்துள்ளார்கள். பாரசீகத்தின் மதத்தினை பொருத்தவரை இவர்களின் பிதான மதமாக ஸெராஸ்ரிய மத்ம் காணப்பட்டதுடன், மஜூசிகள், பொளத்தர்கள், இந்துக்கள், கிரிஸ்தவர்கள் என்போரும் காணப்பட்டனர். அரச மதமாக ஸெராஸ்ரிய மதமே விளங்கியது. ஸெராஸ்ரிய மதத்தினரும் நெருப்பு வணங்கிகளாக காணப்பட்டார்கள். பாரசீகர்களின் சமூக நிலையை பொருத்தவரை சமூகத்தில் உயர் அந்தஸ்துள்ளவர்களா கிஸ்ராக்கள் (மன்னர்கள்) காணப்பட்டார்கள். இவர்களின் உடம்பில் கடவுளின் இரத்தம் ஓடுவதாக கருதி இவர்களுக்கு மக்கள் சுஜூது செய்து வந்தார்கள். அவர்களுக்கு அடுத்தாக சாத்திரக்காரர்களும், மந்திரிகள் பிரதானிகள் என்பதாக சமூக அந்தஸ்து கணிக்கப்பட்டது. சமூகத்தின் கடைசி மட்டத்தவர்களாக பொது மக்கள் கணிக்கப்பட்டார்கள் இவர்கள் மொத்த சனத்தொகையில் 90 மூ. பாரசீகர்களின் ஒழுக்க நிலையை பொருத்தவரை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. அவர்கள் தங்களின் கூடப் பிறந்தவர்களையே திருமனம் முடிக்கின்ற நிலை காணப்பட்டது. 2ம் கிஸ்ரா மன்னன் தனது சொந்த சகோதரியை திருமனம் முடித்திருந்தார். இவ்வாறு பெண்களின் நிலை மிகமோசமானதாக இருந்தது. எவர் எவர் மீதும் அத்துமீறலாம் என்ற நிலை காணப்பட்டது. அவர்களின் அரசியல் நிலையை பொருத்தவரை அவர்களின் அரசர்கள் சாசானிய பரம்பரையைச் சாசர்ந்தவர்கனாக மாத்;திரம் காணப்பட்டார்கள். முடிசூட்டுவதற்கு ஆண்களில் எவரும் இல்லாத போது சிறுவர்களையும் சிறுவர்களும் இல்லாத போது பெண்களையும் அரசர்களாக தேர்தெடுத்தார்கள். இவடவாரான நிலையே அவர்களின் சமூகத்தில் காணப்பட்டது.

2.2 பாரசீகத்தில் இஸ்லாம் பரவல்

கி.பி 637 ல் காதிஸிய்யாவில் நடந்த போரிலும் கி.பி 641 ல் நகாவந்தில் இடம்பெற்ற போரிலும் முஸ்லிம்கள் சாசனியர்களை தோற்கடித்து அங்கு இஸ்லாமிய அரசை நிறுவினாகள். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான பாரசீகளாகள் இஸ்லாத்தை தழுவிக் கொண்டார்கள். இவ்வாறு 7 ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் பாரசீகத்தினை கைப்பற்றியதனைத் தொடர்ந்து இஸடலாமிய உலகம் படிப்படியாக பாரசீக நாகரீகத்தின் செல்லவாக்கிற்கு உற்படலாயிற்று.

2.3 பாரசீகத்தில் ஷPஆ பரவல்

அப்துல்லாஹ் இப்னு ஸபாவினால் எகிப்தில் பெரும் சக்தியாக மாறிய இவ்வியக்கம் பின்னர் ஈராக்கை மையமாக வைத்து இயங்கத் தொடங்கியது ஈராக்கில் இக்கொள்கை வர்வதற்கும், வாழ்வதற்குமான சூழ்நிலை காணப்பட்டதால் தான் இவ்விடம் ஷீஆ மத்திய தளமாக மாற்றம் கண்டது. கிரேக்க, பாரசீக, இந்து நாகரீகங்களின் தாக்கங்கள் இங்கு அதிகரித்திருந்தன. மானி, மஸ்தக் போன்றோர் போதித்த போதனைகளின் தாக்கமும் இங்கு காணப்பட்டது. இவை அனைத்தினதும் பல்வேறு சிந்தனைகளை இணைத்துக் கொண்டு இக்கொள்கை இங்கு வளர்ந்து சென்றது. பாரசீகப் பிரதேசத்தில் காணப்பட்ட தெய்வீக உரிமைக் கோட்பாடு பற்றிய சிந்தனை பரம்பரை ஆட்சி முறையொன்றுக்கு வழிவகுத்ததால் நபியவர்களின் வழி வந்த பாத்திமா நாயகியின் வாரிசுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் சிந்தனை அங்கு வலுப்பெறத் துவங்கியது. அடுத்ததாக பாரசீக மன்னன் யஸ்தஜிர்த் என்பவனின் மகள் ஹஜான் ஷாவை இமாம் ஹஸன் அவர்கள் மனம்முடித்திருந்தமையும் பாரசீகப்பகுதியில் அலி (றழி) அவர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் வலுப்பெறக் காரணிகளாக அமைந்தது எனலாம். அத்துடன் ஆட்சியாளர்களும் இக்கொள்கை வளர்வதில் முன்னின்று செயற்பட்டுள்ளனர். ஈரானின் வடமேற்கில், கஸ்வீன் கடலுக்கு அண்மையில் அமைந்துள்ள நகரான அர்தபீல் என்ற நகரத்தை ஸபிய்யுத்தீன் அல்அர்தபீலி என்ற ஷீஆத்தாக்கம் பெற்ற சூபி ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவரது பரம்பரையில் வந்த ஹைதர் என்பவனது மூன்றாவது மகன் இஸ்மாயீல் என்பவன் தனது தந்தையின் மரணத்தின் பின்னால் ஆட்சிக்கு வந்தான். இதை அடிப்படையாகக் கொண்டே இஸ்மாயீல் ஸஃபவி என்ற இணைப்புப் பெயர் கொண்டு இவன் அழைக்கப்படுகின்றான். இவன், கி. பி. 1501 அளவில் ஈரானின் அஸர்பைஜான் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய நரகங்களில் ஒன்றான திப்ரீஸ் மாகாணத்தை தனது ஆட்சித்தலைமையகமாக எடுத்து, இமாமிய்யா என்ற கொள்கையைப் பிரகடனப்படுத்தியதோடு, ஈரானின் ஏனைய நகரங்களுக்கும் இதை பரவலாக்கல் செய்யப்போவதாகவும் கூறினான். மட்டுமல்லாது, அதற்கு எதிராக எழும் சகலவிதாமான எதிர்ப்புக்களையும் தான் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவித்தான். அதுவரை காலமும் அங்கு (ஈரானில்) 90 வீதம் ஷாஃபி மத்ஹப் சார்ந்த முஸ்லிம்களே வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் உள்ளவர்கள் அனைவரும் ஷாபி மத்ஹபினராச்சே, அவர்களை எப்படி இந்தக் கொள்கைக்கு நாம் நிற்பந்திக்கலாம், அது கூடாத நடைமுறையே என ஷீஆ ஆலிம்களால் அவன் எவ்வளவோ உபதேசிக்கப்பட்ட போதும் இவ்வாறு கூறினான். இவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் சில - லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரசூலுல்லாஹ், அலி வலியுல்லாஹ்' என்ற வாசகங்களுடன், அவனது பெயர் பொறித்து நாணயம் வெளியிட்டமை. - மூன்று கலீபாக்களையும் மிம்பர்களில் சபிப்பதுடன், பன்னிரண்டு இமாம்களையும் எல்லையற்றுப் புகழும்படி கதீப்மார்களுக்கு பணித்தமை, - அவனைக் கணும்போதெல்லாம் அவனுக்கு சுஜுத் செய்யுமாறு மக்களை வற்புறுத்;தியமை, - அப்துல்காதிர், அபூஹனீஃபா (ரஹ்) போன்றோரின சமாதிகள் துவம்சம் செய்யப்பட்டதோடு, சுன்னா முஸ்லிம்களின் மண்ணறைகளைத் தோண்டி எலும்புகளை எரிக்கும்படி உத்தரவிட்டமை, இது பக்தாதில் தாராளமாக அரங்கேற்றப்பட்டது. - அல்மத்ஹப் அல்இமாமி (அலி இமாமத்திற்கு தகுதியானவர்) என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி சுன்னி முஸ்லிம்கள் பலவந்தப்படுத்தப்பட்டமை. இந்த இஸ்மாயீலின் ஆட்சியில் சில ஆண்டுகளில் மாத்திரம் மில்லியன் சுன்னி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் ஆட்சியாளர்கள் இவனை அடியொட்டி நடப்பதற்கு ஓர் முன்னுதாரணமாக இவன் செயற்பட்டுள்ளான் என்பதே உண்மை சுன்னி முஸ்லிம்கள் இவ்வாறு கொடுமைப்பத்தப்பட்டு, குழுமப்படுகெலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அறிந்த உஸ்மானிய கலீஃபா சுல்தான் முதலாவது சலீம் அவர்கள் கி.பி. 1514ல் பாரிய படையைத் தயார் செய்து ஈராக்கிற்கு அனுப்பிவைத்தார்கள். ஆறாண்டுகளின் பின்னர் பக்தாத் விடுவிக்கப்பட்டது. அவனது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டாள், ஈராக்கின் ஆக்கிரிமிப்பாளர்கள் கொலை விரட்டியடிக்கடிக்கப்பட்டு, சூத்திரதாரிகள் செய்யப்பட்டனர், இஸ்மாயீல் அஸ்ஸஃபவி நாட்டை விட்டும் தப்பியோடி போர்த்துக்கல் சிலுவைப் போராளிகளுடன் கைகோர்த்தான், அவனது படைகள் எகிப்து, பஹ்ரைன், கதீஃப் ஆகிய பகுதிகளை ஆக்ரிமிப்பது என்றும், அவர்கள் ஹுர்முஸ், மற்றும் பலஸ்தீனை ஆக்கிரிமித்துக் கொள்வது என்றும் ஒப்பந்தமும் பண்ணிக் கொண்டான். இதை அறிந்து உஸ்மானியப் படைகள் இந்த சதியை உடன் முறியடித்து முடிவுக்குக் கொண்டு வந்தனர். இஸ்மாயீல் திப்ரீஸில் மரணத்தைத் தழுவினான், அவனது மகன் தஹ்மாஸப் அஸஸ்ஸஃபவி கி.பி. 1524 ல் ஆட்சிக்கு வந்தான். இவன், உஸ்மானிய கலீஃபா இருந்த சுலைமானுல் கானூனி அவர்களுக்கு எதிராக மஜர், நம்ஸா ஆகிய இரு நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து தனது தந்தையைப் பார்க்கவும் சழைத்தவன் இல்லை என்பதை நிரூபித்தான்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.