பான்ஷெத் அணை

பான்ஷெத் அணை (மராத்தி:पानशेत) அல்லது தானாஜிசாகர் அணை, புனேவின் தென்மேற்கு பகுதியில் 50கி.மீ. நீள அம்பி ஆற்றின் மீதுகட்டப்பட்டதாகும். 1950ல் கட்டப்பட்ட இந்த அணை வேளாண்மைக்காகவும், புனேவின் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுகிறது. 1961 சூலை 12ல் தொழிற்நுட்ப காரணங்களால் பலமிழந்து உடைந்தது.[1].இதன்காரணமாக புனே நகரம் பெரிதும் பதிக்கப்பட்டது.

பான்ஷெத் அணை
பான்ஷெத் அணை அமைவிடம்
அமைவிடம்புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
புவியியல் ஆள்கூற்று18°23′15″N 73°36′46″E
திறந்தது1972
உரிமையாளர்(கள்)மகாராட்டிய அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
Impoundsஆம்பி ஆறு
உயரம்63.56 m (208.5 ft)
நீளம்1,039 m (3,409 ft)
கொள் அளவு4,190 km3 (1,010 cu mi)

அமைவிடம்

புனேவிலிருந்து 30+ கி.மீ. தொலைவிலும் மும்பையிலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

சிறப்புகள்

இந்த அணை 63.56 மீ(208.5 அடி) உயரமும் 1039மீ (3409அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 4190 கி.மீ.3(1,010 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு 303,000.00 கி.மீ.3 (72,693.57 cu mi) ஆகும்[2]

சுற்றுலா தளங்கள்

  • இதன் அருகே உள்ள பான்ஷெத் குளம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். புனேவிலிருந்தும், மும்பையிலிருந்தும் அதிகளவு பயணிகள் வருகின்றனர். அணையின் உப்பங்கழி நீரே இந்த குளமாகும்.
  • பான்ஷெத் நீர் பூங்கா -நீர் விளையாட்டுகள் நிறைந்த ஒரு பூங்கா

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.