பாதுகாப்பு

பாதுகாப்பு என்பது பொதுவாக முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். நமது வாழ்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது. நாம் நமது செயற்பாட்டிலோ அல்லது வேறு செயல்பாட்டிலோ பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றாவிடின் பின் விழைவுகளை தரக்கூடும். அவை உயிர்ச் சேதம், அங்கவீன இழப்பு, இயற்கை அழிவு, பொருளாதாரச் சேதம், போன்ற பல அழிவுகளை உருவாக்கலாம். இது போன்ற அழிவுகள் பாதுகாப்பு முன் எச்சரிக்கை குறைபாடு காரணமாகவே பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளது. இது போன்ற பல இழப்புகளில் இருந்து முன் எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு என்ற முன் எச்சரிக்கை செயல்ப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பு செயற்பாடு

பாதுகாப்பு செயற்பாடானது ஒவ்வொரு செயல்முறைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதேவேளை பாதுகாப்பு செயல்முறையானது ஒவ்வொரு நாட்டுச் சட்டத்தின் அடிப்படையிலும், அதேவேளை வேறு பல பாதுகாப்பு செயல்முறைகளும் நமக்கு பயனுள்ளனவாக இருக்கும். அத்தோடு இந்த பாதுகாப்பு செயல்முறையானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நமக்கு உதவும் என்று நம்ப முடியாமலும் உள்ளன, ஆனாலும் பாதுகாப்புச் செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் பாரிய அழிவுகளில் இருந்து நம்மை குறிப்பிட்ட அளவில் காப்பாற்றலாம் என்பது திடம். ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்வருமாறு.

  • உலகப் பாதுகாப்பு
  • நாட்டுப் பாதுகாப்பு
  • மக்கள் பாதுகாப்பு
  • இயற்கை வளப் பாதுகாப்பு
  • பொருளாதாரப் பாதுகாப்பு
  • தொழில் நுட்பப் பாதுகாப்பு
  • தற்காப்பு
  • தற்காப்பு உரிமைகள்
  • இரகசியப் பாதுகாப்பு
  • மொழிப் பாதுகாப்பு
  • சட்டவியல் பாதுகாப்பு

இது போன்ற மேலும் பல பாதுகாப்பு நடைமுறைகளை காணலாம்.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.