பாட்டு வாத்தியார்

பாட்டு வாத்தியார் இயக்குனர் டி. பி. கஜேந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரமேஷ் அர்விந்த், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 22-சூலை-1995.[1][2][3][4][5]

பாட்டு வாத்தியார்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புகே. நல்லசாமி கவுண்டர்
இசைஇளையராஜா
நடிப்புரமேஷ் அர்விந்த்
ரஞ்சிதா
ஜெய்சங்கர்
ரவீந்தர்
ஸ்ரீகாந்த்
ராகவி
கிருஷ்ணா ராவ்
ஒளிப்பதிவுபேபி பிலிரி
படத்தொகுப்புராஜகீர்த்தி
வெளியீடுசூலை 22, 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

  • ரமேஷ் அரவிந்த்
  • ரஞ்சிதா
  • ஜெய்சங்கர்
  • செந்தில்
  • ரவீந்திரன்
  • ரவிகாந்த்
  • கோவை சரளா
  • ராகவி
  • குமரிமுத்து
  • குலதெய்வம் ராஜகோபால்

கதைச்சுருக்கம்

செல்வந்தர் பாண்டியன் (ஜெய்சங்கர்) அவர் வாழும் கிராமத்தின் தலைவர். கடந்த காலத்தில் அக்கிராமத்திற்கு பள்ளிக் கூடம் கட்டித் தந்தவர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை காட்டிலும், பாண்டியனின் மகள் தெய்வானைக்கு (ரஞ்சிதா) செல்வாக்கு அதிகம். அவள் கட்டளையின் படி தான் ஆசிரியர்கள் நடந்தனர்.

அந்த கிராமத்தில் சில கட்டுப்பாடுகள் உண்டு. உள்ளூரில் மட்டும் தான் திருமணத்திற்கு பெண் எடுக்க முடியும். கிராமப் பெண்கள் கிராமத்தை தாண்டி வெளியே செல்ல அனுமதி கிடையாது.

பாண்டியனின் பள்ளிக் கூடத்தில், இசை கற்றுத்தர, ரமேஷ் (ரமேஷ் அரவிந்த்) நகரத்திலிருந்து வருகிறான். துவக்கத்தில், மாணவர்கள் கற்காமல் ரமேஷை கலாட்டா செய்தாலும், நாளடைவில் மாணவர்களை தன் வசப்படுத்துகிறான் ரமேஷ். அந்நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக தெய்வானையுடன் மோதல் ஏற்படுகிறது. பின்னர், மோதல், ரகசிய காதலாக மாறுகிறது. அதே சமயம், பாண்டியனின் உறவினர் பேச்சிமுத்து (ரவிகாந்த்) சிறையிலிருந்து ஊர் திரும்புகிறான்.

கடந்த காலத்தில், ஊர் கட்டுப்பாட்டை மீறி கற்பகமும், வெற்றியும் காதலித்தனர். கிராம மக்களுக்கு தெரிய வந்த உடன், பேச்சிமுத்து வெற்றியை கொன்று சிறை சென்று விடுகிறான். கற்பகம் மனநிலை பாதிக்கப்படுகிறாள்.

நேரம் பார்த்து பேச்சிமுத்துவை பழி வாங்க காத்திருக்கிறான் கற்பகத்தின் அண்ணன் மாரப்பன். கிராமக் கட்டுப்பாட்டை மீறி வெளியூரைச் சேர்ந்த ரமேஷும், உள்ளூர் தெய்வானையும் காதல் செய்வது மாரப்பனுக்கு தெரியவந்து என்னவானது எனபதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

8 பாடல்களைக் கொண்ட இசைத் தொகுப்பு 1995 ஆம் ஆண்டு வெளியானது. வாலி, புலமைப்பித்தன், ந. காமராசன், பிறைசூடன், இளையராஜா ஆகியோர் எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்தார்.[6][7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=paatu%20vadhiyar
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.