பாடினி
பாணரோடு சேர்ந்து அவர்கள் துணைவியரும் பண் பாடுவர், பாட்டிசைப்பர். இவர்களைப் பாடினி என்று அழைப்பர். பாடினியர் கூத்துக் கலையிலும் வல்லவர்கள். அபிநயங்கள் காட்டி ஆடுவார்கள். யாழ்க் கருவியிலும், இனிய இசையை மீட்டுவார்கள். பாணரைப் போலவே, பாடினியரும் பலவகைப்படுவர்.
பாடினியரின் வேறு பெயர்கள்: பாடினிகளுக்குப் பாண்மகள், விறலி, பாடினி, மதங்கி, பாட்டி, பாடன்மகடு எனப் பல பெயர்கள் இருந்தன.
பாடினியின் தன்மை: பாடினியர், இனிய குரல்வளம் கொண்டவர்கள். மென்மையான அழகுள்ளவர்கள். மயில் போன்ற சாயல் கொண்டவர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்கள். இது போன்ற பல செய்திகளை முடத்தாமக்கண்ணியார், சங்கத் தொகை நூல்களுள் ஒன்றான பத்துப்பாட்டுக்களின் கீழ் அடங்கும் பொருநராற்றுப்படை என்னும் நூலில் தருகிறார்.
சங்க இலக்கியங்களில் பாடினி
- பொருநராற்றுப்படை:-
- நன்பகல் அந்தி நடை இடை விலங்கலின்
- பெடை மயில் உருவின் பெரு தகு பாடினி
- பாடின பாணிக்கு ஏற்ப நாள் தொறும்
- நன்பகல் அந்தி நடை இடை விலங்கலின்
- நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
- வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய
- கோட்டின் செய்த கொடுஞ்சி நெடு தேர்
- நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
- பாடினிக்கு எதிர் ஒர் பாடினி தன்னைப் பாட விட்டவள் படைத்த செருக்கை
- விரைசெய் வார் குழல் பாடினி பாடலை வியந்தார்
- படிமையார் தவப் பாடினி வந்து எனக்கு
- கரி உரை மொழிந்த கைதவன் இலங்கைக் கைதவப் பாடினி கழுத்தில்
- பாடினிக்கு எதிர் ஒர் பாடினி தன்னைப் பாட விட்டவள் படைத்த செருக்கை
- ஆன இசை ஆராய்வு உற்று அம் கணர் பாணியினை
- மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க
- ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார்
- ஆன இசை ஆராய்வு உற்று அம் கணர் பாணியினை
- வாடா மாலை பாடினி அணிய
- பாணன் சென்னி கேணி பூவா
- எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க
- வாடா மாலை பாடினி அணிய
- உரவு களிற்று புலாஅம் பாசறை
- நிலவின் அன்ன வெள் வேல் பாடினி
- முழவில் போக்கிய வெள் கை
- உரவு களிற்று புலாஅம் பாசறை
பரிபாடல்:-
- ஒரு திறம் வாடை உளர் வயின் பூ கொடி நுடங்க
- ஒரு திறம் பாடினி முரலும் பாலை அம் குரலின்
- நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற
- ஒரு திறம் வாடை உளர் வயின் பூ கொடி நுடங்க
இவற்றையும் காணவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.