பாசிப் பயறு

பாசிப் பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப்படுகிறது.

பாசிப் பயறு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: மெய்யிருவித்திலையி
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Vigna
இனம்: V. radiata'
இருசொற் பெயரீடு
Vigna radiata
(லி.) R. Wilczek
வேறு பெயர்கள்

Phaseolus aureus Roxb.

முளைப்பயிறாக இருக்கும் பாசிப் பயறு

பயன்கள்

இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொழுக்கட்டை, மோதகம், பொங்கல், பாயசம், கஞ்சி ஆகிய பண்டங்கள் பாசிப்பயற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தமிழரின் திருநாளான பொங்கல் தினத்தன்று சர்க்கரைப்பொங்கல் என்ற உணவுவகை அரிசி, வெல்லத்துடன் பாசிபயறும் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. பாசிபயறு பருப்பு சாம்பாரில் துவரம் பருப்புக்கு பதிலாக சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.சில இடங்களில் அரிசியும், சிறுபயறும் சேர்த்து கஞ்சியாக உண்ணப்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.