பாஃபின் தீவு

பாஃபின் தீவு (Baffin Island, இனுக்ரிருற் மொழி:ᕿᑭᖅᑖᓗᒃ, Qikiqtaaluk, French: Île de Baffin or Terre de Baffin), கனடாவின் நூனவுட் ஆட்புலத்திலுள்ளது. இது கனடாவின் மிகப் பெரும் தீவாகவும் உலகில் ஐந்தாவது பெரிய தீவாகவும் விளங்குகின்றது. இதன் பரப்பளவு 507,451 கிமீ2 (195,928 சது மை). இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 11,000 (2007 மதிப்பீடு). இது 65.4215 , 70.9654 மே ஆட்கூற்றில் அமைந்துள்ளது. ஆங்கில தேடலியலாளர் வில்லியம் பாஃபின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது,[2] இத்தீவு கொலம்பியக் காலத்திற்கு முன்னரே அறியப்பட்டிருக்கக் கூடும். கிறீன்லாந்து, ஐசுலாந்து தீவுகளிலிருந்து எசுக்காண்டினாவிய தேடலியலாளர்கள் இங்கு வந்திருக்கலாம். ஐசுலாந்திய தொன்மைக் கதைகளில் இத்தீவின் அமைவிடம் எல்லுலாந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஃபின் தீவு
உள்ளூர் பெயர்: ᕿᑭᖅᑖᓗᒃ (Qikiqtaaluk)
புவியியல்
அமைவிடம்வடக்குக் கனடா
ஆள்கூறுகள்69°N 72°W
தீவுக்கூட்டம்கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம்
பரப்பளவு507,451 km2 (195,928 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை5th
உயர்ந்த ஏற்றம்2,147
உயர்ந்த புள்ளிஓடின் மலை
நிர்வாகம்
ஆட்புலம்நூனவுட்
பெரிய குடியிருப்புஇக்காலுயிட் (மக். 6,699)
மக்கள்
மக்கள்தொகை10,745 (2006)
அடர்த்தி0.02
இனக்குழுக்கள்இனுவிட்டு (72.7%), பழங்குடி அல்லாதோர் (25.3%), முதல் நாட்டினர் (0.7%), மெத்தீசு (0.5%)[1]

காட்சியகம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.