பவுல்-லூயி சைமண்டு
பவுல்-லூயி சைமண்டு (Paul-Louis Simond) பிரான்சிய மருத்துவரும் உயிரியலாளரும் ஆவார். இவர் அரையாப்பு பிளேக் எலிகளிலிருந்து மற்ற எலிகளுக்கும் மனிதர்களுக்கும் பரவ, நோய்தொற்றிய எலிகளில் வாழும் தெள்ளுப்பூச்சிகளே (Xenopsylla cheopis) காரணம் என சோதனைகள் மூலம் நிரூபித்ததற்காக பெரிதும் அறியப்படுகிறார்.
பவுல்-லூயி சைமண்டு | |
---|---|
![]() பவுல்-லூயி சைமண்டு கராச்சியில் பிளேக் தடுப்பூசியை குத்துகிறார் - சூன் 4, 1898 | |
பிறப்பு | சூலை 30, 1858 போஃபோர்ட்-சுர்-ஜெர்வான், டிரோம், பிரான்சு |
இறப்பு | 3 மார்ச்சு 1947 88) வாலென்சு, பிரான்சு | (அகவை
வாழிடம் | டிரோம், பிரான்சு |
தேசியம் | பிரான்சியர் |
துறை | உயிரியியலாளர், மருத்துவர் |
விருதுகள் | பார்பியர் பரிசு (1898) |
இளமைக் காலம்
பவுல்-லூயி சைமண்டு பிரான்சின் டிரோம் மாவட்ட (டிபார்ட்மென்ட்) போஃபோர்ட்-சுர்-ஜெர்வானில் சூலை 30, 1858 அன்று பிறந்தார். 1878 முதல் 1882 வரை சைமண்டு பொர்தோவிலுள்ள மருத்துவ, மருந்தியல் பள்ளியில் மருத்துவ, உயிரியல் அறிவியல் துறையில் உதவியாளராக இருந்தார். அங்கிருந்தபோது தனது மருத்துவப் பயிற்சியைத் துவங்கினார். 1882 முதல் 1886 வரை பிரெஞ்சு கயானாவின் செயின்ட்-லோரன்ட்-டு-மரோனியிலிருந்த தொழுநோய் மருத்துவமனையில் இயக்குநராக பணியாற்றினார். அப்போது அங்கு குறைந்த வீரியமுள்ள மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் 1886இல் பொர்தோ திரும்பினார். அடுத்த ஆண்டில் தொழு நோய் குறித்த இவரது ஆய்வேட்டிற்கு பரிசு கிடைத்தது; முனைவர் பட்டமும் பெற்றார்.
பணி வாழ்வு
மேலும் அறிய
- Edward Marriott (1966) in “Plague. A Story of Science, Rivalry and the Scourge That Won't Go Away” ISBN 978-1-4223-5652-4
- Portail Institut Pasteur (chronological biography)
- Find health articles (Paul-Louis Simond et les coccidies)