பவபூதி
பவபூதி (Bhavabhuti) (சமக்கிருதம்: भवभूति) இந்தியாவின் எட்டாம் நூற்றாண்டின் சமஸ்கிருத மொழி நாடகங்கள் மற்றும் கவிதைகளால் நன்கறியப்பட்ட அறிஞர் ஆவார். பவபூதி, தற்கால மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பிரதேசத்தின் கோந்தியா மாவட்டத்தில் உள்ள பத்மபுரம் எனும் ஊரில் நீலகண்டர் – ஜதுகாமி இணையருக்கு பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஸ்ரீகண்ட நீலகண்டன் ஆகும். இவரது குருவின் பெயர் பரமஹம்ச தயாநிதி ஆவார்.
பவபூதி, கன்னோசி மன்னர் யசோவர்மனின் அரசவைக் கவிஞராக இருந்ததாகக் கருதப்படுகிறார்.
பவபூதியின் படைப்புகள்
- மகாவீரசரித்திரம் (Mahaviracharita) (பால காண்டத்து இராமரின் வீரத்தை விளக்கும் நூல்[1]
- மாலதிமாதவன் (மாலதி – மாதவனின் காதல் கதை) [2]
- உத்தரராமசரித்திரம் (Uttararamacarita) (உத்தர காண்ட இராமரின் சரித்திரத்தைக் கூறும் நூல்[3]
மேற்கோள்கள்
- Mahavira charita of Bhavabhuti
- Vidyakara; Daniel H.H. Ingalls, An Anthology of Sanskrit Court Poetry, Harvard Oriental Series Volume 44, p. 75
- The Uttara rama charita of Bhavabhuti
வெளி இணைப்புகள்
- The Uttara Rama Charita of Bhavabhuti. With Sanskrit commentary by Pandit Bhatji Shastri Ghate of Nagpur and a close English translation by Vinayak Sadashiv Patvardhan. The Nyaya Sudha Press, Nagpur 1895
- Rama's later history or Uttara-Ram-Charita of Bhavabhuti. Critically edited with notes and an English transltation by Shripad Krishna Belvalkar. Harvard University Press 1915
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.