பலபடித்தான வினைவேக மாற்றம்
வினைபடு பொருள்களும் வினைவேகமாற்றியும் வெவ்வேறு நிலைமைகளில் உள்ள வினைவேக மாற்ற வினைகள் பலபடித்தான வினைவேக மாற்ற வினைகள் எனப்படும். இச்செயல்முறையே பலபடித்தான வினைவேகமாற்றம் (Heterogeneous catalysis) எனப்படும். பலபடித்தான வினைவேக மாற்றத்திற்கான சான்றுகள் பின்வருமாறு.
1. தொடுமுறையில் கந்தக டிரை ஆக்சைடு தயாரிக்கும் வினை.
- SO2 (வாயு) + O2 (வாயு)
2 SO3
- SO2 (வாயு) + O2 (வாயு)
மேற்கண்ட வினையில் வினைபடு பொருள்கள் இரண்டும் வாயு நிலைமையில் உள்ளன. ஆனால் இதற்குப் பயன்படுத்தபடும் வினைவேகமாற்றியான பிளாட்டினம் ஆனது திண்ம நிலையில் இருக்கிறது.[1] எனவே இது ஒரு பலபடித்தான வினைவேக மாற்ற வினையாகும்.
2. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கும் வினை.
- N2 (வாயு) + 3 H2 (வாயு)
2 NH3
- N2 (வாயு) + 3 H2 (வாயு)
மேற்கண்ட வினையில் வினைபடு பொருள்கள் இரண்டும் வாயு நிலைமையில் உள்ளன. ஆனால் இதற்குப் பயன்படுத்தபடும் வினைவேகமாற்றியான இரும்பு ஆனது திண்ம நிலையில் இருக்கிறது.[2] எனவே இது ஒரு பலபடித்தான வினைவேக மாற்ற வினையாகும்.