பர்வானி

பார்வானி என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பர்வானி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் நர்மதா ஆற்றின் இடது கரைக்கு அருகில் அமைந்துள்ளது. இது பார்வானி மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகும். இது முன்னாள் சுதேச மாநிலமான பர்வானியின் தலைநகராக செயற்பட்டுள்ளது. இந்த நகரை சாலை வழியாக மட்டுமே அடைய முடியும். பவங்ஜா என்ற சமண யாத்ரீகத்தலம் பர்வானியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது.

சொற்பிறப்பியல்

பத்வானி என்ற பெயர் பழைய காலங்களில் நகரத்தை சூழ்ந்திருந்த “பட்” காடுகளிலிருந்து தோன்றியது. “வானி” என்பது தோட்டம் என்று பொருள்படும் பழைய சொல். எனவே நகரத்திற்கு பட்வானி என்ற பெயர் வந்தது. அதாவது பாட் தோட்டம் என்ற பொருளாகும். பார்வானி இன்னும் பத்வானி என்று உச்சரிக்கப்படுகிறது.

புவியியல்

பார்வானி 22.03 ° வடக்கு 74.9 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] சராசரியாக 178 மீட்டர் (583 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. பெரிய நர்மதா நதி பர்வானி வழியாக பாய்கிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பார்வானியின் அதிகபட்ச வெப்பநிலை 48'C ஆக உயரும். இது மத்திய இந்தியாவில் வெப்பமான இடமாக ஒன்றாகும். இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் இது சிறிது குளிர்ச்சியடைந்துள்ளது.

பார்வானி சத்புராவின் பெரிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் மழை நாட்களில் இது மத்திய இந்தியாவின் மிக அழகான இடங்களில் ஒன்றாக மாறும். இந்த நகரம் நிமரின் பாரிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. நிமர் பகுதி கிழக்கு நிமர் மற்றும் மேற்கு நிமார் என பிரிக்கப்பட்டுள்ளது. நிமர் என்பது உள்ளூர் சொற்களில் "வேம்பு மரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதி" என்று பொருள்படும். மேற்கு நிமரில் பார்வானி அமைந்துள்ளது. பார்வானியின் வருடாந்திர மழைவீழ்ச்சி சுமார் 15 அங்குலங்கள் ஆகும். இருப்பினும் 2006 ஆம் ஆண்டு முதல் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரித்துள்ளது.

பொருளாதாரம்

பொருளாதார ரீதியாக பார்வானி முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ளது. மேலும் பல சிறு தொழில்கள் இப்பகுதியில் வளர்ந்து வருகின்றன.

புள்ளிவிபரங்கள்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி பார்வானி நகரின் மக்கட் தொகை 55,504 ஆகும். மொத்த சனத்தொகையில் ஆண்கள் 28,437 (51%) என்ற எண்ணிக்கையிலும், பெண்கள் 27,067 (49%) என்ற எண்ணிக்கையிலும் உள்ளனர்.[2]

0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 6961 ஆகும். இது பார்வானியின் மொத்த மக்கள் தொகையில் 12.54% வீதத்தை கொண்டுள்ளது. பார்வானி நகரத்தின் கல்வியறிவு விகிதம் 82.10% வீதமாகும். இது மாநில சராசரி கல்வியறிவு விகிதம் 69.32% ஐ விட அதிகமாகும். பார்வானியில் ஆண்களின் கல்வியறிவு 87.17% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 76.80% ஆகவும் உள்ளது.[2]

கலாச்சாரம்

ஹோலி, ரக்சா பந்தன், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, தசரா, தீபாவளி, முஹர்ரம், குடி பத்வா, கங்கூர், பைடூஜ், ஈத், கிறிஸ்துமஸ், நாக்பஞ்சி ஆகிய அனைத்து முக்கிய பண்டிகைகளும் சம உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.

போக்குவரத்து

பார்வானிக்கு நேரடி தொடருந்து இணைப்பு இல்லை. அருகிலுள்ள தொடருந்து நிலையம் இந்தூரில் அமைந்துள்ளது. மற்றொரு அருகிலுள்ள தொடருந்து நிலையம் கண்ட்வா ஆகும். இது பர்வானியில் இருந்து மாநில நெடுஞ்சாலை எண் 26 வழியாக 180 கி.மீ தூரத்தில் உள்ளது.[2]

பர்வானி மத்திய பிரதேசம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது

சான்றுகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.