பர்மிய இந்தியர்

பர்மாவில் வசிக்கும் இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் பர்மிய இந்தியர் (மியான்மர் இந்தியர்) ஆவர். பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் பர்மாவில் வசித்து வந்தாலும், பெரும்பான்மையினர் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சென்று குடியேறியவர்கள். ஏறத்தாழ ஒன்பது இலட்சம் இந்தியர்கள் பர்மாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் ரங்கூன், மாண்டலே ஆகிய இருநகரங்களிலேயே வாழ்கிறார்கள். அரசு, இராணுவப் பணிகளில் இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றினார்கள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ரங்கூனில் இந்தியர்களே அதிகளவில் வசித்தனர். பல தொழில்களில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவர்களில் தமிழர், இந்திக்காரர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள், குசராத்தியர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பர்மா அரசு இந்திய மொழிகளுக்குத் தடை விதித்ததால், பெரும்பாலான இந்தியர்கள் பர்மிய நீரோட்டத்தில் கலந்து விட்டார்கள். இருப்பினும் பலர் தங்கள் குடும்பப் பெயர்களைச் சூட்டிக் கொண்டும், தம் பண்பாட்டைப் பேணியும், இந்திய மொழிகளைப் பேசியும் வாழ்கின்றனர்.

பர்மிய இந்தியர்கள்
மொத்த மக்கள் தொகை

2,900,000
பர்மிய மக்கட்தொகையில் 2.0% (2011)[1]

குறிப்பிடத்தக்க மக்கள் தொகையைக் கொண்ட இடங்கள்
ரங்கூன், மாண்டலே
மொழிகள்
பர்மிய மொழி, வங்காள மொழி, குசராத்தி, தமிழ், இந்தி, பஞ்சாபி
மதங்கள்
இந்து, இசுலாம், சீக்கியம், புத்தம்
தொடர்புடைய இனக்குழுக்கள்
இந்தியர், தமிழர்
ரங்கூனில் உள்ள தமிழர் கட்டிடக்கலையில் கட்டப்பெற்ற காளி கோயில்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. The Indian Community in Myanmar. http://www.southasiaanalysis.org/%5Cpapers36%5Cpaper3523.html.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.