பரேலி
பரேலி (Bareilly, இந்தி: बरेली, உருது: بریلی) வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் முகனையான நகரமாகும். ராம்கங்கா ஆற்றங்கரையில் ரோகில்காண்ட் என்ற புவியியல் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் பரேலி கோட்டத்தின் தலைநகருமாகும். மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து வடக்கே 252 கிலோமீட்டர்கள் (157 mi) தொலைவிலும் நாட்டுத் தலைநகர் புது தில்லியிலிருந்து கிழக்கே 250 கிலோமீட்டர்கள் (155 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.
பரேலி बरेली | |
---|---|
நகரம் | |
பரேலி நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பரேலி மாவட்டம் |
அரசு | |
• நா.உ | திரு. பிரவீண் சிங் ஐரான் (இந்திய தேசிய காங்கிரசு) |
• ச.பே.உ | திரு. ராஜேஷ் அகர்வால் (பாரதிய ஜனதா கட்சி) |
• நகரத்தந்தை | திருமதி சுப்ரியா ஐரான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 235 |
ஏற்றம் | 81 |
மக்கள்தொகை (கணக்கெடுப்பு 2001) | |
• மொத்தம் | 1 |
இனங்கள் | பரேலியர் |
நேர வலயம் | IST |
பின்கோடு | 2430xx |
வாகனப் பதிவு | UP-25 |
இந்த நகரம் பிரம்பு அறைகலன்களுக்குப் புகழ்பெற்றது. தவிர பருத்தி, தானியங்கள் மற்றும் சர்க்கரை வணிகத்தில் முதன்மை மையமாக உள்ளது. இப்பகுதியில் வணிகம், நிதி, பண்பாடு, கலை, ஆய்வு, கல்வி என பல்வேறுத் தளங்களிலும் இந்த நகரத்தின் தாக்கம் உள்ளது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 699,839 ஆகும்.[1]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.