பரணி (புதினம்)

பரணி என்னும் தமிழ் நாவலை எழுதியவர் ஜெயசாந்தி ஆவார். இந்நாவலின் முதற்பதிப்பு டிசம்பர் 2001 -ல் வெளிவந்தது. சென்னையிலுள்ள மதி நிலையத்தினர் இந்நாவலை பதிப்பித்துள்ளார்கள். இந்நாவலுக்கு தமிழ் முன்னுரையை பிரதிபா ஜெயசந்திரனும், ஆங்கில முன்னுரையை பாதிரியார் அமலதாசும் எழுதியுள்ளார்கள். இதில், பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை, சாதிப் பிரச்சனை ஆகியவை கதாபாத்திரங்கள் மூலமாகவே சொல்லப்படுகிறது. மேலும், கதாபாத்திரங்கள் வாயிலாகவே, பெண்விடுதலைக்கான சாத்தியங்களையும் ஆராய்கிறது. பல தலித்திய சிந்தனைகள் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரணி
நூல் பெயர்:பரணி
ஆசிரியர்(கள்):ஜெயசாந்தி
வகை:புதினம்
துறை:{{{பொருள்}}}
காலம்:2001
இடம்:மதி நிலையம் (சென்னை)
மொழி:தமிழ்
பக்கங்கள்:296
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

விமர்சனம்

ஆகஸ்ட் 2002-ல் வெளிவந்த இந்தியா டுடே பத்திரிகையில் இந்த நாவலை 'கேள்விகளை எழுப்பும் தலித்திய நாவல்' என்று குறிப்பிட்டு விமர்சனம் எழுதியுள்ளார் சிவகாமி ஐ.ஏ.எஸ். பெரியாரியம் தொடர்பான திராவிட இயக்கங்கள் கலப்பு மணத்தை சாதி ஒழிப்புக்கான தீர்வாக முன்மொழிந்தன. தமிழ் தேசிய இயக்கத்தினர் இன்னும் அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் போட்டுடைக்கிறது பரணி நாவல் என அந்த விமர்சனக் கட்டுரையில் சிவகாமி கூறியுள்ளார். தென் மாவட்டங்களின் சாதியக் கலவரங்களின் எதிரொலிதான் பரணி. கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் ஊசிப் போன அவியல், வேலைக்காரிகளின் உயிரை வாங்கி பொழுதெல்லாம் சும்மாயிருந்து ஆண் துணைக்கு ஏங்குவது, நீயா நானா என்று மொக்கையாக ஆண் வர்க்கத்தைப் பெண்ணியம் என்ற பெயரில் சாடி, சாதி மத ஆழங்களில் வண்டி மண்ணைக் கொட்டிக் கொண்டிருந்த எழுத்துக்களின் காலம் முடிந்துவிட்டது என்பதன் அறிகுறிதான் பரணி.

"நாவலின் உருவ அமைப்பு அம்மா பரணிக்கு எழுதிய கடிதம், பரணி எழுதிய சிறுகதை, கடிதம், பிற்சேர்க்கை என புதுமையாக உள்ளது. முதல் நாவலின் நிறை, அதன் குறைகளோடு என்றாலும் நம்பிக்கை தரக்கூடிய சிறந்த எழுத்தாளர் வரிசையில் ஜெயசாந்தியும் வைத்துப் பார்க்கப்படுவார்." என்று அந்த விமர்சனக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.


வெளி இணைப்பு

ஜெயசாந்தியின் இடுகைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.