பன்மொழியாளர்
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தவர் பன்மொழியாளர் (Polyglot) எனப்படுவார்.. எத்தனை மொழிகளை அறிந்தவரை பன்மொழியாளர் என்பது, என்று வரையறை ஏதும் இல்லை. பொதுவாக நான்கு அல்லது ஐந்து மொழிகள் தாம் ஒருவர் அதிகபட்சமாக அறிந்துகொள்ளக்கூடியவையாக அமைகின்றன,
ஒருவர் பல மொழிகளைப் பேசுவதற்கு காரணங்கள் உள்ளன. வெவ்வேறு மொழிகளைப் பேசும் பெற்றோருடன், வேற்றூரில் வாழும்போது பலமொழிகளை அறியக் கூடிய நிலை வரலாம். வெவ்வேறு ஊர்களில் வாழும்போதும், பல மொழிகளைப் பேசும் பகுதியில் வாழும்போதும் இந்நிலை ஏற்படும்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
- கனடாவின் கெபெக்கில், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரசுப் பணிகளை மேற்கொள்கிறது.
- சிங்கப்பூரில் சீனம், ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் சாலை வழிகாட்டிகளைக் காணலாம்.
- சுவிட்சர்லாந்தில் இடாய்ச்சு, இத்தாலியம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பாடம் கற்பிக்கப்படுகின்றன.
- இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் தொடருந்துகளில், தகவல்கள் அம்மாநிலங்களின் மொழிகளிலும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
மேலும் படித்தறிய
மேற்கோள்கள்
புற இணைப்பு
- பன்மொழி பைபிள்கள் சர்வதேச கூட்டத்தில் (ஆங்கிலம், எஸ்பரன்டோ, ஸ்லோவாக்)
- Discussion forum about polyglots
- Non-profit Polyglot Community
- Multilingualism and Word Memorizing
- Newscientist.com, The Gift of the Gab", 2481, 40-43.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.