பனாட்டு
பனாட்டு என்பது பனையில் இருந்து பெறப்படும் ஓர் உணவுப்பொருள் ஆகும்.[1] பனை மரத்திலிருந்து கிடைக்கும் பழம், பனம்பழம் ஆகும்.[2] இந்தப் பனம்பழத்தின் தோலை உரித்து, பழத்தை ஒரு பாத்திரத்திலிட்டு, புளிங்காடி சேர்த்துப் பிசைந்து, ஒரு பனை ஓலைப் பாயில் மென்மையாகத் தடவி, ஞாயிற்றொளியில் காய விட்டு, அது நன்றாகக் காய்ந்த பின், துண்டுதுண்டுகளாக வெட்டி, பனாட்டு ஆக்கப்படும்.[3][4] இதனைச் சமையல் அறைப் புகை கூட்டில் தொங்கவிடுவார்கள். அதை மாரிகாலம் (மழைக்காலம்) சாப்பிடுவார்கள்.
மேற்கோள்கள்
- குமரி அனந்தன் (2010 திசம்பர் 21). "வீணாகும் பனைமரங்கள்!". தினமணி. பார்த்த நாள் 2015 நவம்பர் 20.
- அ. அருள்தாசன் (2014 பெப்ரவரி 8). "மருத்துவ குணம் மிக்க `தவுண்’: தென்காசி பகுதியில் விற்பனை மும்முரம்". தி இந்து. பார்த்த நாள் 2015 நவம்பர் 20.
- மு. கணபதிப்பிள்ளை (1961). தமிழன் எங்கே?. ஈழமணி நூற் பதிப்பகம். பக். 49.
- "குமரி அனந்தன் திடீர் விரதம்". சிஃபி (2007 சூன் 26). பார்த்த நாள் 2015 நவம்பர் 20.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.