பத்மாவதி

பத்மாவதி என்பவர் வைணவ பெண் தெய்வமாவார். இவர் ஆகாசராஜன் எனும் சோழமன்னனுக்கும் தரணி தேவிக்கும் மகளாக பிறந்து வெங்கடாசலபதி என்ற திருமாலின் அவதாரத்தின் மனைவியும் ஆனவர். இவரை அலர்மேல் மங்கை தாயார் என்றும் அழைக்கின்றனர்.

பெயர்க் காரணம்

ஆகாசராஜன் ஏர் உழும் பொழுது கிடைத்த பேழையில், ஆயிரம் இதழ்க்கொண்ட தாமரை மலர் மீது கிடந்தமையால் அலர்மேல் மங்கை எனப்பெயரிட்டு வளர்த்தான். 'அலர்' என்றால் தாமரை, 'மங்கை' என்றால் நற்குணங்கள் பொருந்திய பெண். தாமரை மலர் மீது நற்குணங்கள் பொருந்திய பெண்ணாக வீற்றிருப்பவள் என்ற பொருளில் அலர்மேல்மங்கை என்று அழைக்கின்றனர். இப்பொருளைக்கொண்ட பதமே வடமொழியில் "பத்மாவதி" என்றும், அலர்மேல்மங்கை எனும் தமிழின் திரிபே "அலமேலு மங்கா" என தெலுங்கிலும் கன்னடத்திலும் அழைக்கப்பட்டுவருகிறது.

முன்வரலாறு

திருமாலின் இராம அவதார காலத்தில் வேதவதி என்ற திருமாலின் பக்தை இராமரை திருமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் ராமன் தான் இந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதத்தை பூண்டுள்ளைமையால், அடுத்து வரும் கலியுகத்தில் தான் எடுக்கப்போகும் சீனிவாச அவதாரத்தில் இவளை ஏற்று மணம் முடிக்க வரம் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

திருமணம்

பத்மாவதியை மணம் முடிக்க திருமால் வெங்கடாசலபதியாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் எல்லைக்குட்பட்ட வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கி, பத்மாவதியை மணம் செய்து கொண்டார். இத்திருமணத்திற்காக குபேரனிடம் ஆயிரம் வராகன் பொன்னை கடனாகப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.