பதே ஜங் ஷா
பதே ஜங் ஷா (Fatya Jang Shah) (நேபாளி: फत्तेजङ्ग शाह) (1805 - 1846), நேபாள இராச்சியத்தின் ஆறாவது பிரதம அமைச்சர் ஆவார்.[1][2][3]
தலைமைப் படைத்தலைவர் பதே ஜங் ஷா श्री चौतारिया फत्तेजङ्ग शाह | |
---|---|
![]() | |
பதே ஜங் ஷா | |
பிரதம அமைச்சர் | |
பதவியில் 1840-1843 | |
முன்னவர் | ராணா ஜங் பாண்டே |
பின்வந்தவர் | மதாபர் சிங் தபா |
பதவியில் 1845-1846 | |
முன்னவர் | மதாபர் சிங் தபா |
பின்வந்தவர் | ஜங் பகதூர் ராணா |
பட்டப்பெயர்(கள்) | பதே ஜங் சௌதரியா |
பின்னனி
பிரான ஷா - மோக குமாரி இணையருக்கு 1805ல் பிறந்த பதே ஜங் ஷா, நேபாள பிரதம அமைச்சராக இருந்த புஷ்கர் ஷாவின் தம்பி மகன் ஆவார். இவரது நான்கு தம்பியர்கள் நேபாளப் படையில் தளபதிகளாக பணியாற்றினர். இவரது தங்கை இரண்யகர்ப்ப குமாரி தேவி ராணா வம்சத்தை நிறுவிய ஜங் பகதூர் ராணாவின் மனைவி ஆவார்.
அரசவைப் பணிகள்
பதே சிங் ஷா 1840 முதல 1843 முடிய நேபாள இராச்சியத்தின் படைத்தலைவராக பணியாற்றினார். பின்னர் 1845 முதல் 1846 முடிய பிரதம அமைச்சராகவும், வெளிநாட்டு விவாகரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
குழந்தைகள்
இவருக்கு கட்க விக்ரம் ஷா, குருபிரசாத் ஷா மற்றும் குண பகதூர் ஷா என மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர்.
இறப்பு
14 செப்டம்பர் 1846ல் காட்மாண்டுவில் நடைபெற்ற கோத் படுகொலைகளின் போது பதே சிங் ஷாவும், அவரது மூத்த மகன் கட்க விக்ரம் ஷாவும் மாண்டனர். [4]