பண்பாட்டு மேலாதிக்கம்
பண்பாட்டு மேலாதிக்கம் என்பது ஒரு பன்முகப் பண்பாட்டை ஒர் ஆளும் வர்க்கம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்ற கருத்துரு ஆகும். ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படுபவர்களின் ஒத்துளைப்புடனும், நேரடி ஒடுக்கமுறை ஊடாகவும் தனது மேலாதிக்கைத்தை பேணுகிறது. நேரடி ஒடுக்குமுறை வெளிப்படையாக தெரிந்தாலும், ஒத்துளைப்போரின் பங்களிப்பும் முக்கியமானது. படைத்துறை, நீதித்துறை, சமயம், கல்வி என பல சமூக நிறுவனங்கள் ஊடாக இந்த மேலாதிக்கம், ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது.[1]
ஐக்கிய அமெரிக்காவின் பண்பாட்டு மேலாதிக்கம்
இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இணையம், இசை, நடனம், நசைச்சுவை என எல்லா பண்பாட்டுத் துறைகளிலும், மற்றத் துறைகளிலும் அமெரிக்காவின் செல்வாக்கும் மேலாதிக்கமும் உள்ளது.
இலங்கையில் பண்பாட்டு மேலாதிக்கம்
இலங்கையில் பண்பாட்டு மேலாதிக்கம் அரசியல், சமயப் பெரும்பான்மையான சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர் தாயகப் பகுதிகளில் குடியேற்றம், இனப் படுகொலைகள், அரசியல் ஒடுக்குமுறை ஆகியவை வெளிப்படையாக நடத்தப்படும் மேலாதிக்கம் ஆகும். கோயில்களைக் கைப்பற்றல் (கதிர்காமம், நல்லூர்), புத்த சிலைகளை தமிழ் ஊர்களில் நிறுவுதல், வரலாற்றை திருத்துக் கற்பித்தல், பெம்மை தேர்தெடுக்கப்படாத தமிழ் ஆட்சியாளர்களை முன்னிறுத்தல் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போன்ற வழிமுறைகள், சமூக நிறுவனங்கள் ஊடாக பண்பாட்டு மேலாதிக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்கிறது.