பண்பாட்டு அதிர்ச்சி

பண்பாட்டு அதிர்ச்சி (Culture shock) என்பது, இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயர்தலாலோ, ஒரு சமூகச் சூழலிலிருந்து இன்னொரு சமூகச் சூழலுக்குச் செல்வதாலோ, இன்னொரு வாழ்க்கை முறையைக் கைக்கொள்ளவேண்டி ஏற்படுவதாலோ, பழக்கமில்லாத வாழ்க்கை முறை அனுபவத்துக்கு உள்ளாகும்போது ஒருவருக்கு ஏற்படக்கூடிய தன்னிலையிழத்தல் உணர்வு ஆகும்.[1] பண்பாட்டு அதிர்ச்சிக்கான முக்கியமான காரணிகளுள் ஒன்று தனியாள் ஒருவர் அந்நியமான சூழலுக்குச் செல்வதாகும்.

அளவுக்கதிகமான தகவல்கள், மொழி தெரியாமை, தலைமுறை இடைவெளி, தொழில்நுட்ப இடைவெளி போன்றவை பொதுவான சிக்கல்கள்.[2] எந்தவொரு சமுதாயத்தைச் சேர்ந்த தனிமனிதருன் பண்பாட்டு வேறுபாடுகளால் தாக்கத்துக்கு உள்ளாவதால், பண்பாட்டு அதிர்ச்சியைத் தடுக்க முடியாது.

மேற்கோள்கள்

  1. Macionis, John, and Linda Gerber. "Chapter 3 - Culture." Sociology. 7th edition ed. Toronto, ON: Pearson Canada Inc., 2010. 54. Print.
  2. Pedersen, Paul. The Five Stages of Culture Shock: Critical Incidents Around the World. Contributions in psychology, no. 25. Westport, Conn: Greenwood Press, 1995.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.