பண்பலை ஒலிபரப்பு

வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high fequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.


இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM - Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM - Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.