எஸ். எம். பாரூக்

பண்ணாமத்துக் கவிராயர் எனப்படும் எஸ். எம். பாரூக் (சய்யத் முகமத் ஃபாரூக், சனவரி 1, 1940 - மே 6, 2019) இலங்கை கவிஞரும், சிறுகதையாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

பண்ணாமத்துக் கவிராயர்
பிறப்புஸய்யத் முஹமத் ஃபாரூக்
சனவரி 1, 1940(1940-01-01)
மாத்தளை, இலங்கை
இறப்புமே 6, 2019(2019-05-06) (அகவை 79)
மாத்தளை
தேசியம்இலங்கையர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

இலங்கையின் மலையகத்தில் மாத்தளையில் பிறந்த இவர் 1960 ஆம் ஆண்டு முதல் ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வருகிறார். ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்தவர்.

மறைந்த இலங்கையின் எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் நடாத்திய இன்ஸான் பத்திரிகையில் ஈராண்டு பணி புரிந்த இவரின் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள் தாரகை, மலர், பாவை, அக்னி, அலை போன்ற சஞ்சிகைகளிலும், இன்ஸான், செய்தி, தினகரன், வீரகேசரி, திசை, அஷ்ஷூரா போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இவரது ஆங்கிலம் மீதான புலமை காரணமாக அல்லாமா இக்பால், நஸ்ரூல் இஸ்லாம், பைஸ் அகமத் பைஸ் போன்ற முக்கியமான கவிஞர்களினதும், பாலத்தீனக் கவிதைகள் எனப் பல முக்கிய கவிஞர்களினதும், இயக்கங்களினதும் கவிதைகளை தனது மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு தந்தவர். அக்னி இதழில் வெளிவந்த தாஜ்மஹால் (நவம்பர் 5, 1975) எனும் கவிதையும், அலை சஞ்சிகையில் வெளிவந்த மெயில் பஸ் தம்பதி எனும் சிறுகதையும் இவரது படைப்பாற்றலுக்கான சான்றுகள்.

இவரது நூல்கள்

  • காற்றின் மௌனம் ( மொழியாக்கக் கவிதைகள், 1996, மலையக வெளியீட்டகம்)
  • ஷரந்தீபிலிருந்து மஹ்மூத் ஸலி அல் பரூதி (2002)
  • Genesis (மாத்தளை மலரன்பனின் 14 சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு, கொடகே நிறுவனம், 2014)

விருதுகள்

  • கொடகே வாழ்நாள் விருது, 2016
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.