பட்டையகலம்

ஒப்புமைக் குரல் சமிக்ஞை, ஒரு தனிப்பட்ட அதிர்வெண் மட்டும் கொண்டு திகழ்வதில்லை; தொடர்பாடல் தடத்தில் உள்ள பலவேறுபட்ட அதிர்வெண்கள் கொண்ட அலைவடிவத்தால் ஆனது. அதிர்வெண்களின் ஒரு குறிப்பிட்ட கூட்டுக் கலவைதான் ஒருவருடைய குரலை நிர்ணயிக்கின்றது. இயற்கையின் பல படைப்புகளும் நிகழ்வுகளும் பலதரப்பட்ட அதிர்வெண்களின் கூட்டுக் கலவைகளாக வெளிப்படுகின்றன. வானவில்லின் வண்ணங்கள் பல்வேறு ஒளி அதிர்வெண்களின் சேர்க்கையே; இசையொலியும் பல்வேறு கேட்பொலி அதிர்வெண்களாலானதே. சமிக்ஞைகளில் உள்ள அதிர்வெண்களின் அளவெல்லையைக் குறிப்பது, தொடர்பாடல் களத்தில் உள்ள வழக்கம். இதை அலைவரிசைப் பட்டை அகலம் என்று வழங்குவர்.

எ-டு: தொலைபேசியில் பேச்சுச் சமிக்ஞையின் அலைப்பட்டை, 200 Hz-3500 Hz வரை எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.