அனுபவம்

பட்டறிவு அல்லது அனுபவம் (experience) என்பது புதியதாக தோன்றும் அக அறிவு. அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்க்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே அனுபவம்.[1]

அறிவும் பட்டறிவும்

அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்:

  1. கூரிய நோக்கு(perception)
  2. கல்வி கற்கும் முறை(learning process)
  3. விவாதித்து முடிவுக்கு வருதல்(debates)
  4. செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு
  5. தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)

அறிவைப் பெறும் வழிகள்

நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.

பட்டறிவும் அதனை வளர்த்துக் கொள்ளும் முறையும்

ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.

பழமொழிகள்

பட்டா தான் புத்தி வரும்,[2]
பட்டு தான் திருந்தப்போறான் போன்ற பழமொழிகள் பட்டறிவைப் பற்றியதாகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "ஊட்டி பதிவுகள் -1 - ஜெயமோகன் கதைகள்". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.
  2. http://www.dinamalar.com/user_comments.asp?uid=14592&name=kattan
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.