படிநிலை இயக்கி

படிநிலை இயக்கி அல்லது படிநிலை மின்னோடி (stepper motor, step motor, அல்லது stepping motor, ஸ்டெப்பர் மோட்டார்) என்பது துரியற்ற நேரோட்ட மின்சார இயக்கி ஆகும், இது இயக்கியின் ஒரு முழு சுழற்சியை பல சமநிலை படிகளாகப் பிரிக்கிறது. இயக்கியானது பயன்பாட்டின் தேவைக்கேற்ற வேகம், முடுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வுசெய்யும்பொழுது எவ்வித பின்னூட்ட உணரி எதுவுமின்றி (திறந்த சுற்றுக் கட்டுப்பாடு) நகர்த்த கட்டளையிடப்படுகிறது.[1]

ஒரு எளிமையான ஸ்டெப்பர் மோட்டார் அனிமேஷன் (ஒருமுனைவுள்ள)
சட்டகம் 1: மேலுள்ள மின்காந்தம் (1)-ற்கு மின் இணைப்புறும்பொழுது தன்னருகேயுள்ள பற்சக்கர வடிவிலுள்ள இரும்பு ரோட்டாரின் பல் அமைப்பினை ஈர்க்கிறது. பற்கள் மின்காந்தம் (1) உடன் பொருந்தும்பொழுது, அவைகள் மின்காந்தம் (2)லிருந்து சிறிது விலகி இருக்கும்.
சட்டகம் 2: மேல் மின்காந்தம் (1)-ற்கு மின் இணைப்பினை துண்டித்துவிட்டு, வலது மின்காந்தம் 2-ற்கு மின் இணைப்புறும்பொழுது, பற்களை தன்னை நோக்கி ஈர்க்கிறது. இங்கே உதாரணமாக 3.6° சுழற்சி கிடைக்கிறது.
சட்டகம் 3: கிழ் மின்காந்தம் (3) மின் இணைப்புறும்பொழுது; மற்றொரு 3.6° சுழற்சி கிடைக்கிறது.
சட்டகம் 4: இடது மின்காந்தம் (4) மின் இணைப்புறும்பொழுது, மீண்டும் 3.6° சுழற்சி கிடைக்கிறது. மீண்டும் மேல் மின்காந்தம் (1) மின் இணைப்புறும்பொழுது, ரோட்டாரின் ஒரு பல் நகர்ந்திருக்கும். இங்கே உதாரணமாக 25பற்கள் உள்ளதால் ஒரு முழு சுழற்சிக்கு 100 படிகள் தேவைப்படும்.

படிநிலை இயக்கி, நெகிழ் வட்டு, குறு வட்டு (cd), வரைவி (plotter), ஒளிப்படக்கருவி வில்லை, கணினி அச்சுப்பொறி, படிம வருடி, எண்சார் கட்டுபடுத்தி (cnc) ஆகியவற்றில் பயன்படுகின்றது.

பயன்கள்

  • அதிக வேகத்துடன் துல்லியமான நகர்த்தல் தேவைப்படும் இடங்களில் பயன்படுகிறது.
  • குறைந்த வேகத்தில் அதிக முறுக்கு விசையை அளிக்கிறது.

குறைபாடுகள்

  • குறைந்த திறன் கொண்டவை - நேரோட்ட மின்சார இயக்கியை ஒப்பீடும்பொழுது படிநிலை இயக்கியானது செயற்படாதபொழுதும் தொடர்ந்து மின்சாரத்தினை பயன்படுத்துகிறது, அதனால் அதிக வெப்பநிலையில் இருக்கும்.
  • பொதுவாக படிநிலை இயக்கிகள் அதி வேகத்தில் குறைந்த முறுக்கு விசை கொண்டவை.
  • பின்னூட்டம் அற்றவை - பெரும்பாலான படிநிலை இயக்கிகள் தானுந்திகளைப் போன்று ஒருங்கிணைந்த பின்னூட்டம் கொண்டவை அல்ல, திறந்த சுற்றுக் கட்டுப்பாடு கொள்கையின் அடிப்படையில் இயங்கியபொழுதும் சிறந்த துல்லியத்தினை வழங்குகிறது. எல்லை ஆளி ('Limit switch') அல்லது துவக்க உணரிகள் ('home detector') பாதுகாப்பிற்காகவும்/சுட்டுநிலையை நிறுவவும் பயன்படுத்தப்படுகிறது. [2]

சான்றுகள்

  1. "ஸ்டெப்பர் மோட்டார்". பார்த்த நாள் செப்டம்பர் 22, 2015.
  2. "பயன்கள் (அ) குறைகள்". பார்த்த நாள் செப்டம்பர் 22, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.