பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம்
பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் ( Punjab School Education Board, P.S.E.B.) இந்தியாவின் சண்டிகரில் அமைந்துள்ள கல்வி வாரியமாகும். 1969இல் பஞ்சாப் மாநிலத்தில் பொதுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடதிட்டங்களை நிர்வகிக்கவும் சீரான தேர்வுகளை நடத்தவும் இந்திய பஞ்சாப் அரசால் சட்டமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. மேலும் இது பாடபுத்தகங்களை வெளியிடுகின்றது. படிப்புதவித் தொகைகளை நிர்வகிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாக உள்ளது. இந்த வாரியத்தின் தலைமையகம் சண்டிகர் அருகில் சாகிப்ஜாடா அஜித்சிங் நகர் (மொகாலி)யில் அமைந்துள்ளது.
சுருக்கம் | பிஎஸ்ஈபி |
---|---|
உருவாக்கம் | நவம்பர் 25, 1969 |
வகை | அரசு கல்வி வாரியம் |
தலைமையகம் | மொகாலி |
அமைவிடம் |
|
ஆட்சி மொழி | பஞ்சாபி |
தலைவர் | முனைவர். தேசிந்தர் கவுர் தாலிவால்[1] |
தாய் அமைப்பு | பள்ளிக் கல்விச் செயலர் (பஞ்சாப்) |
வலைத்தளம் | www.pseb.ac.in |
பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியத்திற்கு முழுநேர அவைத்தலைவர் தலைமை ஏற்கிறார். இவரது பதவிக் காலம் மூன்றாண்டுகளாகும். இவர் பஞ்சாப் மாநில அரசின் பள்ளிக் கல்விச் செயலரின் கீழ் பசியாற்றுகின்றார். தற்போதைய தலைவராக முனைவர். தேசீந்தர் கவுர் தாலிவால் உள்ளார்.