பஞ்ச புராணம்
சைவ நூல்களான பன்னிரு திருமுறைகளிலும் ஐந்து பகுதிகளை மட்டுமே கொண்ட பாகுபாடு பஞ்ச புராணமாகும். இவை பன்னிரு திருமுறைகளை அன்றாடம் ஓத இயலாத காரணத்தினால் எளிமைப்படுத்த உருவாக்கப்பட்டது.
பஞ்ச புராணத்தின் பகுதிகள்
- தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார்
- திருவாசகம், திருக்கோவையாரர் - மாணிக்கவாசகர்
- திருவிசைப்பா - திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது சைவ அடியார்கள்
- திருப்பல்லாண்டு - சேந்தனார்
- திருத்தொண்டர்புராணம் - சேக்கிழார்
பஞ்சபுராணம் ஓதுதல்
சிவாலயங்களில் ஆறுகால பூசைகளின் போது பஞ்சபுராணம் ஒதுதல் நிகழ்கிறது. இதற்காக தேவாரம், திருவாசகம் திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர்புராணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்தும் ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது.
கருவி நூல்
சிவவழிபாடு - கி பழநியப்பனார் நூல்
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.