பசவர்

பசவர் (Basava அல்லது Basavanna) கன்னட மாநிலத்தில் தோன்றியவர். சாளுக்கிய மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றியவர். இந்நெறி சிவனை மட்டுமே கடவுளெனக் கருதியது. சிவவழிபாட்டின் மூலம் வீடு பேற்றை அடையலாம் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை. சாதிப்பாகுபாடு, சடங்கு, உருவ வழிபாடு இவற்றை களைவதில் பெரிதும் ஈடுபட்டார். தம்மைப் பின்பற்றுபவர்கள் புலால் உண்பதையும், கள் குடிப்பதையும் கைவிட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதித்தார். சமூக சீர்திருத்த வாதியாக விதவை மறுமணத்தை ஆதரித்தும், குழந்தை திருமணத்தை எதிர்த்தும் செயல்பட்டார். இவரைப் பின்பற்றுவோர் வீர சைவர்கள் (லிங்காயத்துகள்) என்றழைக்கப்படுகின்றனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.