பக்தி யூதம்

பக்தி யூதம் (Hasidism /Hasidic Judaism, எபிரேயம்: חסידות) என்பது ஒரு யூத சமயப்பிரிவு ஆகும். இது ஆன்மீக இயக்கமாக எழுச்சி பெற்று, சமகால மேற்கு உக்ரைனில் 18-ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. இன்று அமெரிக்க ஐக்கிய நாடு, இசுரேல், பிரித்தானியா ஆகிய இடங்களில் முக்கியமாக அங்கீகரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இதன் நிறுவுநராகவும் பிதாவாகவும் இஸ்ரேல் பென் எலியேசர் காணப்படுகிறார்.[1] தற்கால பக்தி யூதம் நெறி வழுவா ("பக்தி ") யூதத்தினுள் ஒரு துணைக்குழுவாக உள்ளதோடு, அதனுடைய சமய பரிபாலனத்திற்காகவும் சமூகத் தனிமைப்படுத்தலுக்காகவும் அறியப்படுகின்றது.

பக்தி யூதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம்.

உசாத்துணை

  1. "Orthodox Judaism: Hasidism". பார்த்த நாள் 13 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.