பக்தபூர் மாவட்டம்

பக்தபூர் மாவட்டம் (Bhaktapur district) (நேபாளி: भक्तपुर जिल्लाListen ; நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். காத்மாண்டு சமவெளியில் பாக்மதி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டம், நேபாள மாநில எண் 3-இல் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் மிகவும் சிறியதாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் பக்தபூர் நகரம் ஆகும்.

நேபாள மாநில எண் 3-இல் பாக்மதி மண்டலத்தில் அமைந்த பக்தபூர் மாவட்டத்தின் அமைவிடம்

பக்தபூர் மாவட்டம் 119 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,04,651 ஆகும்.[1] எழுத்தறிவு விகிதம் 81.68% ஆக உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 99.4%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 0.6%

நகராட்சிகள்

  • ஆனந்தலிங்கேஷ்வர் நகராட்சி
  • பக்தபூர் நகராட்சி
  • சங்குநாராயணன் நகராட்சி
  • மத்தியப்பூர் திமி நகராட்சி
  • மகாமஞ்சுஸ்ரீ – நாகர்கோட் நகராட்சி
  • சூரியவிநாயக் நகராட்சி

மாவட்டப் புள்ளி விவரங்கள்

  • மொத்த மக்கள் தொகை 304,651
  • ஆண்கள் 154,884
  • பெண்கள் 149,767
  • பாலின விகிதம் 103.4
  • வீடுகளின் எண்ணிக்கை 68,636
  • மாவட்டப் பரப்பளவு 119 சதுர கிலோ மீட்டர்கள்
  • மக்கள் தொகை அடர்த்தி 2,560[1][3]

சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள்

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012. Archived from the original on 2013-04-18. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system, . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:87-7903-210-9, http://curis.ku.dk/ws/files/20497354/de2_001.pdf, பார்த்த நாள்: Nov 22, 2013
  3. http://unstats.un.org/unsd/demographic/sources/census/2010_PHC/Nepal/Nepal-Census-2011-Vol1.pdf page no 52

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.