பகிர்வு

பகிர்வு (Distribution) என்றப் பொருளியல் கலைச்சொல் தனிநபர்களிடையே அல்லது (தொழிலாளர்கள், நிலம் மற்றும் மூலதனம் போன்ற) உற்பத்திக் காரணிகளிடையே எவ்வாறு மொத்த வெளியீடு, வருமானம், அல்லது செல்வம் பகிரப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பதாகும். [1] பொதுவான கோட்பாட்டிலும் தேசிய வருமான உற்பத்தி கணக்குகளில் வெளியீட்டின் அலகாக வருமான அலகு உள்ளது. தேசிய கணக்குகளின் ஒரு பயனாக காரணிகளின் வருமானத்தை வகைப்படுத்துவதாகவும்[2] அவற்றின் பங்களித்தலை மதிப்பிடுவதாகவும் உள்ளது. இருப்பினும் இதன் குவியம் தனிநபர்கள் அல்லது குடும்பங்கள் மீதாக உள்ளபோது தேவையான திருத்தங்கள் தேசிய வருமான கணக்குகளிலும் பிற தரவுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு, மேல் (அல்லது கீழ்) தட்டில் உள்ள முதல் குறிப்பிட்ட விழுக்காட்டு குடும்பங்களுக்கு, அடுத்த விழுக்காட்டு வீச்சில் உள்ள குடும்பங்களுக்கு என்றவாறாக வருமானத்தின் எத்தனை பங்கு செல்கிறது என்பதை அறிவது முதன்மையாக உள்ளது. மேலும் உலகமயமாக்கல், வரிக்கொள்கைகள், தொழில்நுட்பம் போன்றவை இந்தக் குடும்ப வருமானங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவதிலும் ஆர்வம் கொள்கிறது.

மேற்சான்றுகள்

  1. Paul A. Samuelson and William Nordhaus (2004). Economics, 18th ed., [end] Glossary of Terms, "Distribution."
  2. "Glossary "Factor income"". Bureau of Economic Analysis, U.S. Department of Commerce (2006-So Djifjkccqeady10-02). பார்த்த நாள் 2010-11-09.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.